'வாழு, வாழ விடுங்கள்': கிண்டல், கேலிகளுக்கு கீர்த்தி சுரேஷ் பதில் | அஜித் அடுத்த பட அறிவிப்பு - தொடரும் தாமதம் | மீண்டும் தெலுங்கு இயக்குனர் படத்தில் சூர்யா ? | 'மாஸ்க்': வாய்ப்பில்லாத ஆண்ட்ரியாவுக்கு வாய்ப்புகள் வருமா? | 50 வருட திரையுலக பயணத்தில் இருந்து ஓய்வு பெறும் நடிகை துளசி | 'மெமரிஸ்' இரண்டாம் பாகம் ; பிரித்விராஜ் விருப்பம் | பட விளம்பர மோசடி ; பெண் உள்ளிட்ட ஐவர் மீது நடிகர் யஷ்ஷின் தாயார் போலீசில் புகார் | இரண்டு நாளில் ஒரு மில்லியன் பார்வைகளைத் தொட்ட மஞ்சு வாரியரின் குறும்படம் | மோகன்லால் மம்முட்டி படங்களை பயன்படுத்தியதால் 2 வருட தடை விதித்தனர் ; இயக்குனர் வினயன் | இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் |

அஜித் நடித்து இந்த 2025ம் ஆண்டில் 'விடாமுயற்சி, குட் பேட் அக்லி' ஆகிய இரண்டு படங்கள் சுமார் இரண்டு மாத இடைவெளியில் வெளியாகின. அஜித்தின் அடுத்த படத்தையும் 'குட் பேட் அக்லி' படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் தான் இயக்குவார் என்றார்கள். கடந்த மாதம் தீபாவளியை முன்னிட்டு இப்படத்தின் அறிவிப்பு வெளியாகும் என்றார்கள். ஆனால், வெளியாகவில்லை.
தீபாவளி முடிந்து ஒரு மாத காலமாகியும் இந்தப் படம் குறித்த வேறு எந்த அப்டேட்டும் வரவில்லை. ஒரே ஆண்டில் இரண்டு படங்களைக் கொடுத்த காரணத்தால் அடுத்த படத்தை அஜித் தள்ளிப் போடுகிறாரா அல்லது இன்னும் சரியான கதை கிடைக்கவில்லையா என்பது தெரியவில்லை. இந்த வருட முடிவுக்குள்ளாவது பட அறிவிப்பு வருமா என அஜித் ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.
ஜனவரியில் படப்பிடிப்பை ஆரம்பித்தால் கூட அடுத்த வருட தீபாவளிக்கு வெளியிடலாம். இன்னும் தாமதமானால் 2027ல்தான் அந்தப் படம் வரும். 2026ல் அஜித் நடித்த படம் வராமல் கூட போகலாம்.