டிரெயின்-ல் ஸ்ருதிஹாசன் பாடிய கன்னக்குழிக்காரா | ரஜினிக்காக மட்டுமே அதை செய்தேன் : சொல்கிறார் உபேந்திரா | மறு தணிக்கைக்கு செல்லும் பராசக்தி | வருட இறுதியில் ஓடிடியில் மகிழ்விக்க வரிசைக்கட்டும் 'புதுப்படங்கள்'..! | குரு சோமசுந்தரம், அனுமோல் இணைந்து நடிக்கும் பாரிஸ் கபே | ஜனநாயகன் படத்தை தெலுங்கில் வெளியிடும் பிரபல நிறுவனம் | ‛ஆசாத் பாரத்' பற்றி நெகிழும் இந்திரா திவாரி | ஜெயிலர் 2 படத்தில் ஷாருக்கான் : உறுதிசெய்த பாலிவுட் நடிகர் | விஜய்யின் வளர்ச்சியை தடுக்க நினைக்கின்றனர் : நடிகை மல்லிகா | இம்மார்ட்டல் படத்தின் டீசர் எப்படி இருக்கு |

நடிகை சமந்தாவின் புதிய படமான ‛மா இண்டி பங்காரம்' படம் துவங்கி உள்ளது. இப்படத்தில் சமந்தா, குல்ஷன் தேவய்யா, திகநாத், கவுதமி, மஞ்சுஷா ஆகியோர் நடிக்க உள்ளார்கள். 'ஓ பேபி' படத்தை இயக்கிய நந்தினி ரெட்டி இந்தப் படத்தை இயக்குகிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.
இவர் அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது, ‛‛என் வாழ்வில் நிறைய ஏற்ற இறக்கங்களை சந்தித்துள்ளேன். எனக்கு தசை அழற்சி நோய் வந்தபோது என் காதில் கேட்கும்படியே சிலர் கிண்டல் செய்தனர். நான் விவாகரத்து செய்தபோதும், சில துயரங்களில் இருந்தபோதும் அதை சிலர் கொண்டாடி மகிழ்ந்தனர். அது எனக்கு வலியை தந்தது. இதற்காக கவலைப்படுவதை கொஞ்சம் கொஞ்சமாக நிறுத்திக் கொண்டேன். இப்போது மகிழ்ச்சியாக இருக்கிறேன்'' என்றார்.