ஸ்பெயின் கால்பந்தாட்ட மைதானத்தில் வெளியிடப்பட்ட டொவினோ தாமஸ், நஸ்ரியா பட டைட்டில் | 'வாழ' இயக்குனரின் இயக்கத்தில் மஞ்சு வாரியர் நடிக்கும் 'ஹேப்பி லூப்' | ‛கிருஷ்ணாவதாரம்' படத்திற்கு உ.பி.,யில் வரிவிலக்கு அளித்த முதல்வர் யோகி ஆதித்யநாத் | காஞ்சனா 4 படத்தின் அதிரடி போஸ்டர் வெளியானது | மீண்டும் தெலுங்கு படத்தில் யோகி பாபு | ராமாயணா படத்தில் சாய் பல்லவியின் சம்பளம் எவ்வளவு? | மே 18ல் ராம்சரணின் 'பெத்தி' டிரைலர் வெளியீடு | ஏமாற்றம் தந்த ஏப்ரல் மாதம் | 'எல்ஐகே' 200 கோடி வசூலிக்கும் என எதிர்பார்த்தேன் : விக்னேஷ் சிவன் ஆதங்கம் | மீண்டும் வருகிறது 'மணி ஹெய்ஸ்ட்' |

'தலைவி' படத்திற்கு பிறகு ஏ.எல்.விஜய் அடுத்து மாதவன், கங்கனா ரணாவத் இருவரையும் முதன்மை கதாபாத்திரமாக வைத்து புதிய படத்தை இயக்கியுள்ளார். ஏற்கனவே ஹிந்தியில் மாதவனும், கங்கனாவும் இணைந்து தனு வெட்ஸ் மனு படத்தில் நடித்துள்ளனர். இரண்டாவது முறையாக இந்த படத்திற்காக மீண்டும் இணைந்துள்ளனர். இவர்களுடன் இணைந்து கவுதம் ராம் கார்த்திக் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவு பெற்றுள்ளது. சைக்காலஜிக்கல் த்ரில்லர் கதையம்சம் கொண்ட இந்த படத்தை தமிழ், ஹிந்தி மற்றும் தெலுங்கு என மூன்று மொழிகளில் உருவாக்கியுள்ளனர். இப்படத்தை டிரைடன்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளனர்.
இந்த படத்திற்கு ' சர்க்கிள்' என தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இந்த படத்தின் டிஜிட்டல் உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைபற்றியுள்ளனர். இதனால் இந்த படத்தை இவ்வருட டிசம்பர் மாதத்தில் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளனர்.




