இந்த 3 விஷயங்களும் முக்கியமானவை : தீபிகா படுகோனே | உருவக்கேலி விவகாரம் : கயாடு லோஹர் கொடுத்த விளக்கம் | அடி வாங்க தயாரா : குஷ்பு கோபம் | தனுஷின் தேரே இஷ்க் மெயின் டிரைலர் வெளியீடு : வரவேற்பு எப்படி | காந்தா படத்தின் முதல் நாள் வசூல் விவரம் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ரஜினி படத்திலிருந்து சுந்தர் சி விலகல் ஏன் : கமல் சொன்ன பதில் | ஜப்பானில் வெளியாகும் மலைக்கோட்டை வாலிபன் : ரிலீஸ் தேதி அறிவிப்பு | தேசிய விருதுக்கு படம் அனுப்புவதில் ஏற்பட்ட சிக்கல் : நீதிமன்றத்தை நாடிய பஹத் பாசில் படக்குழு | மம்முட்டிக்கு பிரித்விராஜ் சிபாரிசு, விநாயகனுக்கு மம்முட்டி சிபாரிசு : களம்காவல் சுவாரசியம் | சித்தார்த், ராஷி கண்ணா இணையயும் 'ரெளடி அண்ட் கோ' |

மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில், சூரி, சுஹாஸ், மகிமா நம்பியார் மற்றும் பலர் நடிக்கும் படம் 'மண்டாடி'. இப்படத்தின் படப்பிடிப்பு ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி கடல் பகுதியில் வெள்ளிக்கிழமை அன்று நடைபெற்றது.
அப்போது கேமரா வைக்கப்பட்டிருந்த படகு திடீரென கடலில் தடுமாறியது. அதில் கேமரா கடலில் மூழ்கியது. சுமார் 60 லட்ச ரூபாய் மதிப்புள்ள 'ரெட்' கேமரா அது. மேலும், சில பொருட்களும் மூழ்கியதாகத் தெரிகிறது.
நல்ல வேளையாக வேறு யாரும் கடலில் மூழ்கவில்லை. மீனவர்கள் பாதுகாப்புடன் படப்பிடிப்பு நடத்தியதால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. இது குறித்து காவல் துறை விசாரணையும் நடந்து வருகிறதாம்.
கடலும் கடல் சார்ந்த இடங்களிலும் 'மண்டாடி' படப்பிடிப்பு நடந்து வருகிறது. அனுபவம் வாய்ந்த ஒளிப்பதிவாளர் எஸ்ஆர் கதிர் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்து வருகிறார்.