இந்த 3 விஷயங்களும் முக்கியமானவை : தீபிகா படுகோனே | உருவக்கேலி விவகாரம் : கயாடு லோஹர் கொடுத்த விளக்கம் | அடி வாங்க தயாரா : குஷ்பு கோபம் | தனுஷின் தேரே இஷ்க் மெயின் டிரைலர் வெளியீடு : வரவேற்பு எப்படி | காந்தா படத்தின் முதல் நாள் வசூல் விவரம் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ரஜினி படத்திலிருந்து சுந்தர் சி விலகல் ஏன் : கமல் சொன்ன பதில் | ஜப்பானில் வெளியாகும் மலைக்கோட்டை வாலிபன் : ரிலீஸ் தேதி அறிவிப்பு | தேசிய விருதுக்கு படம் அனுப்புவதில் ஏற்பட்ட சிக்கல் : நீதிமன்றத்தை நாடிய பஹத் பாசில் படக்குழு | மம்முட்டிக்கு பிரித்விராஜ் சிபாரிசு, விநாயகனுக்கு மம்முட்டி சிபாரிசு : களம்காவல் சுவாரசியம் | சித்தார்த், ராஷி கண்ணா இணையயும் 'ரெளடி அண்ட் கோ' |

நடிகர் தனுஷ் தற்போது ‛போர் தொழில்' பட இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் நடித்து வருகிறார். இது தனுஷின் 54வது படமாக உருவாகிறது. வேல்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.
இந்த படத்தில் கதாநாயகியாக மலையாள நடிகை மமிதா பைஜூ நடிக்கிறார். கே.எஸ். ரவிக்குமார், கருணாஸ், பிரித்வி பாண்டிராஜ் மற்றும் மலையாள நடிகர்கள் ஜெயராம், சுராஜ் வென்ஜரமூடு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
கடந்த மூன்று மாதங்களாக இந்த படத்தின் படப்பிடிப்பை சென்னை, ராமநாதபுரத்தில் படமாக்கி வந்தனர். தற்போது இதன் தயாரிப்பாளர் ஐசரி கணேஷிற்கு லண்டனில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் இந்த படம் குறித்து கேள்வி எழுப்பபட்டது . அதற்கு அவர் கூறியதாவது, " போர் தொழில் படத்தின் வெற்றிக்குப் பிறகு விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு இப்போது முழுவதும் நிறைவு பெற்றது. இந்த படத்தை அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளோம். " என தெரிவித்துள்ளார்.