தயாரிப்பாளர் தக்காளி சீனிவாசன் காலமானார் | போர் சூழலுக்கு மத்தியில் சென்னை திரும்பினார் நடிகர் அஜித்குமார் | பிரியா பவானி சங்கரை தொடர்ந்து ரவிதேஜா படத்தில் இணைந்த தமன்னா! | இன்வெஸ்டிகேஷன் திரில்லர் படத்தில் நடிக்கும் குமரன் | சூப்பர் நேச்சுரல் கிரைம் திரில்லராக உருவாகும் 'மண்டவெட்டி' | தனுசுக்கு ஜோடியாகும் நடிக்கும் ருக்மணி வசந்த்! | 'ஆர்யா 40' படத்தில் இரு நாயகிகள் | 'டென்ஷன்' படத்தில் காமெடி கலந்த வில்லனாக ஆர்.கே.வரதராஜ் | 'ஜெயிலர் 2' படத்தில் ஷாருக்கான் கதாபாத்திரம் என்ன தெரியுமா? | அனிமேஷன் படத்தை இயக்குகிறாரா அனில் ரவிபுடி? |

நடிகர் தனுஷ் தற்போது ஹிந்தியில் 'தேரே இஸ்க் மெயின்' படத்தில் நடித்து படத்தில் நடித்து வருகிறார். மறுபுறம் குபேரா, இட்லி கடை ஆகிய படங்களில் மீதமுள்ள படப்பிடிப்பில் நடித்து வருகிறார்.
ஏற்கனவே போர் தொழில் பட இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ் புதிய படத்தில் நடிக்கவுள்ளார் என தகவல்கள் பரவியது. இதற்கு 'அறுவடை' என தலைப்பு வைத்துள்ளனர். இதனை வேல்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கின்றனர்.
இந்த நிலையில் சமீபத்தில் வேல்ஸ் நிறுவனம் தயாரிப்பில் மாரி செல்வராஜ், தனுஷ் கூட்டணியில் புதிய படம் உருவாகிறது என அறிவித்தனர். இதனால் தனுஷ், விக்னேஷ் ராஜா படம் கைவிடப்பட்டதாக தகவல்கள் பரவியது. இது குறித்து நாம் விசாரித்தப்படி தனுஷ், விக்னேஷ் ராஜா படம் கைவிடப்படவில்லை. படப்பிடிப்பு துவங்க சற்று தாமதம் ஆகும் என கூறப்படுகிறது.