பாலிவுட்டில் கவனம் செலுத்தும் ராஷி கண்ணா | பவிஷின் ‛லவ் ஓ லவ்' முதல்பார்வை வெளியீடு | ஒரே வாரத்தில் ஆயிரம் கோடி வசூல் செய்த துரந்தர் 2 | நேரடி ஓடிடி ரிலீஸ் : விஜய் சேதுபதி நடிக்கும் காட்டான் முதல் வரிசை கட்டும் புதுவரவுகள் | ஐஸ்வர்யா ராய் பார்த்து நடிக்க ஆசைப்பட்டேன்: அபிநயா | கோவாவில் செட்டில் ஆகிறாரா ரவிமோகன் | 'எல்ஐகே' படத்தால் மாறிய 'காளிதாஸ் 2, லீடர்' வெளியீடுகள் | தாய்லாந்து தீவில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா ஹனிமூன் | பிரசாந்த் நடிக்க வேண்டிய 'பூவே உனக்காக' : தேடிப் போன விஜய் அப்பா…! | 'பெத்தி' படப்பிடிப்பில் ராம்சரணுக்கு கண்ணில் காயம் பட்டதா ? படக்குழுவினர் விளக்கம் |

நடிகர் தனுஷ் தற்போது ஹிந்தியில் 'தேரே இஸ்க் மெயின்' படத்தில் நடித்து வருகிறார். மறுபுறம் குபேரா, இட்லி கடை ஆகிய படங்களின் படப்பிடிப்பை நிறைவு செய்துள்ளார். இவற்றில் குபேரா படம் ஜுன் மாதமும், இட்லி கடை படம் அக்டோபர் மாதமும் வெளியாக உள்ளன.
இதுதவிர போர் தொழில் பட இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ் புதிய படத்தில் நடிக்கவுள்ளார் என தகவல்கள் பரவியது. இதற்கு 'அறுவடை' என தலைப்பு வைத்துள்ளனராம். வேல்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதன் படப்பிடிப்பு முதலில் ஏப்ரல் மாதத்தில் துவங்குவதாக இருந்தது. ஆனால் படத்தின் செட் அமைக்கும் பணியின் தாமதத்தால் இப்போது இதன் படப்பிடிப்பை ஜுன் மாதத்தில் துவங்க முடிவு செய்துள்ளனர். இந்த படத்திற்கான செட் அமைக்கும் பணியை தயாரிப்பாளர் ஐசரி கணேஷிற்கு ஈ.வி.பி நகருக்கு எதிரில் சொந்தமான 15 ஏக்கர் நிலத்தில் அமைத்து வருகின்றனர்.