தர்பார் தோல்வி குறித்து ஓபன் ஆக பேசிய ஏ.ஆர்.முருகதாஸ் | தமிழில் ரீமேக் ஆகும் கன்னட படம் 'சூ ப்ரம் சோ' | சர்ச்சில் ரொமான்ஸ்: ஜான்வி கபூர் படத்திற்கு எதிர்ப்பு | பிளாஷ்பேக்: ரீ என்ட்ரி வாய்ப்புகளை மறுத்த சுவலட்சுமி | ‛கேங்ஸ்டர்' ஆக ‛லெஜண்ட்' சரவணன் | ஆண்ட்ரியா படத்தை பார்க்க நீதிபதிகள் முடிவு | சர்தார் 2 படத்தில் உள்ள சிக்கல் | பிளாஷ்பேக்: எழுத்தாளருக்கான தேசிய விருது பெற்ற முதல் நடிகை | இரண்டு பட வாய்ப்பை தவறவிட்ட அனுபமா பரமேஸ்வரன் | ரயில் பைட், ஆட்டமா தேரோட்டமா... : ‛கேப்டன் பிரபாகரன்' மலரும் நினைவில் ஆர்.கே.செல்வமணி |
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் லோகேஷ் கனகராஜ். அவருடைய அடுத்தடுத்த படங்கள் பற்றி கடந்த சில நாட்களாகவே பல்வேறு செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.
'கூலி' படத்திற்குப் பிறகு 'கைதி 2' படத்தை இயக்கப் போவதாகத்தான் அவர் அளித்த பேட்டிகளில் சொல்லியிருந்தார். ஆனால், ரஜினிகாந்த், கமல்ஹாசன் இணைந்து நடிக்கும் புதிய படம் ஒன்றை அவர் இயக்க உள்ளதாக கடந்த சில நாட்களாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. ஹிந்திக்குச் சென்று அமீர்கான் நடிக்க உள்ள ஒரு படத்தையும் இயக்கப் போகிறார்.
இதனிடையே 'கைதி 2' படத்திற்கு முன்பாக லோகேஷ் கதாநாயகனாக நடிக்க உள்ளதாகவும் நாம் ஏற்கெனவே கடந்த வாரம் செய்தி ஒன்றையும் வெளியிட்டிருந்தோம். அதில் 'கைதி 2' படத்திற்கான லோகேஷ் சம்பளம் குறித்தும், படத்தின் பட்ஜெட் குறித்தும் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகக் குறிப்பிட்டிருந்தோம்.
லோகேஷ் அப்படத்திற்காக 75 கோடி ரூபாய் சம்பளம் கேட்டுள்ளதாக கோலிவுட் வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகிறது. 'மாநகரம்' படத்தின் மூலம் லோகேஷை இயக்குனராக அறிமுகப்படுத்தி அடுத்து அவருக்கு 'கைதி' படத்தை இயக்கவும் வாய்ப்பு கொடுத்த நிறுவனம் டிரீம் வாரியர் பிக்சர்ஸ்.
தன்னை அறிமுகப்படுத்தியவர்களிடம் லோகேஷ் இவ்வளவு சம்பளம் கேட்கலாமா என சிலரும், வளர்ந்த பிறகு கேட்பதில் என்ன தவறு, அவருக்காகவும் படத்தின் வியாபாரம் நடக்குமே என்று சிலரும் கோலிவுட்டில் பேசுகிறார்கள்.