நேரடி ஓடிடி ரிலீஸ் : விஜய் சேதுபதி நடிக்கும் காட்டான் முதல் வரிசை கட்டும் புதுவரவுகள் | ஐஸ்வர்யா ராய் பார்த்து நடிக்க ஆசைப்பட்டேன்: அபிநயா | கோவாவில் செட்டில் ஆகிறாரா ரவிமோகன் | 'எல்ஐகே' படத்தால் மாறிய 'காளிதாஸ் 2, லீடர்' வெளியீடுகள் | தாய்லாந்து தீவில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா ஹனிமூன் | பிரசாந்த் நடிக்க வேண்டிய 'பூவே உனக்காக' : தேடிப் போன விஜய் அப்பா…! | 'பெத்தி' படப்பிடிப்பில் ராம்சரணுக்கு கண்ணில் காயம் பட்டதா ? படக்குழுவினர் விளக்கம் | அஜித் 64 அறிவிப்புக்காக காத்திருக்கும் ரசிகர்கள் | 26வது பிறந்தநாளை தந்தையுடன் கொண்டாடிய திலீப் மகள் ; தாயுடன் பத்து வருடமாக பாராமுகம் | போலி 'ஏஐ' வீடியோக்கள் : 'துரந்தர்' இயக்குனர் ஆதித்ய தர் எச்சரிக்கை |

சுப்ரமணியன் ரமேஷ் இயக்கத்தில் நட்டி, அருண் பாண்டியன், அக்ஷரா ரெட்டி, யுவினா, வினோதினி நடிக்கும் படம் 'ரைட்'. ஒரு பிரச்னை என்றால் போலீஸ் ஸ்டேசனுக்கு செல்வார்கள். போலீஸ் ஸ்டேஷனுக்கே பிரச்னை என்றால் என்ன நடக்கும் என்பது படத்தின் கரு. அதாவது, ஒரு போலீஸ் ஸ்டேசனுக்குள் சென்றவர்கள் திரும்பி வர முடியாத நிலை, அங்கே அகப்பட்ட அவர்கள் என்ன செய்கிறார்கள். இதை செய்வது யார் என்ற திரில்லர் பாணியில் கதை நடக்கிது. இதில் போலீசாக நடிக்கும் நட்டி குறைந்த சம்பளம் வாங்கியிருக்கிறார்.
முக்கியமான கேரக்டரில் வரும் அருண் பாண்டியன் நடிக்க உதவி செய்து இருக்கிறார். காரணம், படத்தை இயக்குபவர் நட்டியிடம் உதவி இயக்குனராக இருந்தவர். அவர் அலுவலகத்தில் பல ஆண்டுகள் தங்கியிருந்தவர். அந்த பாசத்தில் படத்துக்கு உதவி செய்து இருக்கிறார். இந்த படத்தில் பிக்பாஸ் பிரபலம் அக் ஷரா ரெட்டி முக்கியமான வேடத்தில் வருகிறார். சினிமா வேண்டாம் என்ற முடிவில் இருந்தவரை உங்களை தங்கை மாதிரி பார்த்துக் கொள்கிறோம் என கூறி படக்குழு நடிக்க வைத்ததாம்.




