என்னை ஏன் டார்கெட் செய்கிறார்கள் : கயாடு லோஹர் வேதனை | பெரிய சம்பளத்தை மட்டுமே எதிர்பார்த்து நான் நடிப்பதில்லை : தீபிகா படுகோனே விளக்கம் | ரன்வீர், சாரா நடித்துள்ள துரந்தர் பட டிரைலர் வெளியானது | ரஜினி படத்திலிருந்து விலகியதால் மீண்டும் கார்த்தியுடன் இணையும் சுந்தர்.சி | பாலகிருஷ்ணா 111வது படத்தில் ராணி ஆக நயன்தாரா | எம்புரான் விமர்சனம் : பிரித்விராஜ் கருத்து | மீண்டும் காமெடி ஹீரோவான சதீஷ் | ஒரே படத்தின் மூலம் தமிழுக்கு வரும் தெலுங்கு, மலையாள ஹீரோயின்கள் | டேனியல் பாலாஜியின் கடைசி படம்: 28ம் தேதி வெளியாகிறது | பிளாஷ்பேக்: சோகத்தில் வென்ற ரஜினிகாந்தும், தோற்ற விஜயகாந்தும் |

ஆர்.ஜே .பாலாஜி இயக்கத்தில் சூர்யா, திரிஷா, சுவாசிகா, நட்டி நடராஜ், சிவதா ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'கருப்பு'. இந்த படத்தின் டீசர் ஏற்கனவே வெளியான நிலையில் இப்படம் அடுத்த ஆண்டு ஏப்ரலில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் இந்த கருப்பு படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் நட்டி நடராஜ் ஒரு தகவல் வெளியிட்டு இருக்கிறார். அவர் கூறுகையில், ''நீதிமன்றம் குறித்து பல சுவாரஸ்யமான தகவல்களை இந்த படத்தில் ஆர்.ஜே .பாலாஜி சொல்லி இருக்கிறார். நாமெல்லாம் வெளியில் இருந்து தான் நீதிமன்றத்தை பார்த்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் நீதிமன்றத்துக்குள் நடக்கும் விஷயங்கள் நமக்கு தெரியாது. குறிப்பாக ஒரு கேஸ் எப்படி நடத்தப்படுகிறது என்பது வக்கீலுக்கு தான் தெரியும். அதுபோன்ற விஷயங்களை ஆராய்ந்து இந்த படத்தில் அவர் காட்சிகள் அமைத்திருக்கிறார். அதனால் இந்த படம் ஒரு சுவராஸ்யமான வித்தியாசமான படமாக இருக்கும்'' என்று நட்டி நடராஜ் கூறியுள்ளார்.