ரஜினி, கமல் இணையும் படம்: லதா ரஜினிகாந்த் சொன்ன தகவல் | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் 'கார்மேனி செல்வம்' புதிய ரிலீஸ் தேதி | மீண்டும் சிரஞ்சீவி படத்திற்கு இசையமைக்கும் தமன்! | என் போட்டோவை மார்பிங் செய்கின்றனர்!: ரச்சிதா ஆதங்கம் | ரொமான்டிக் திரில்லர் கதையில் உருவாகும் 'ஆசை' | 'கேம் ஆப் த்ரோன்ஸ்' புதிய தொடர் வெளியானது: உலகம் முழுக்க வரவேற்பு | 'மாஸ்டர் பிளான்' படத்தில் பொலிட்டிக்கல் பிளாக் காமெடி | வில்லனாக நடிக்க விரும்பும் முனீஷ்காந்த் | பிளாஷ்பேக்: 'நிழல்கள்' ராதுவை தெரியுமா? | பிளாஷ்பேக்: ஒரே படத்தில் 3 பேருக்கு வாழ்வளித்த கண்ணதாசன் |

சுப்ரமணியன் ரமேஷ்குமார் இயக்கத்தில், நட்டி எனும் நட்ராஜ், அருண் பாண்டியன் இணைந்து நடிக்கும் படத்துக்கு ‛ரைட்' என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இது திரில்லர் பாணியில் உருவாகி உள்ளது. எளிய மக்களுக்கு பிரச்னை என்றால் போலீஸ் ஸ்டேஷன் சென்று உதவி கேட்பார்கள். அதற்கே ஒரு பிரச்னை என்றால் என்னவாகும்?, இது தான் இப்படத்தின் கரு.
ஜில்லா புலி படங்களில் அசோசியேட் இயக்குநராக பணிபுரிந்துள்ள சுப்ரமணியன் ரமேஷ்குமார் இந்த படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். பிக்பாஸ் அக்ஷரா ரெட்டி, வினோதினி, மூணாறு ரமேஷ், டைகர் தங்கதுரை, உதய் மகேஷ் உட்பட பலர் நடித்துள்ளனர். வீரம் படத்தில் குழந்தை நட்சத்திரம் யுவினா பார்தவி இப்படத்தில் கல்லூரி மாணவியாக நடித்துள்ளார், வம்சம் பல படங்களில் அம்மாவாக நடித்த அனுபமா குமாரின் மகன் ஆதித்யா ஷிவக் புதுமுகமாக அறிமுகமாகிறார். “ரைட்” படத்தின் பர்ஸ்ட் லுக்கை, விஜய் சேதுபதி வெளியிட்டுள்ளார்.




