பிளாஷ்பேக் : 'ஷோலே' படத்தை தழுவி உருவான 'முரட்டு கரங்கள்' | பிளாஷ்பேக்: காப்பி ரைட் வழக்கில் சிக்கிய சிவாஜி படம் | இந்தியா, ஆசியான் திரைப்பட விழா: சென்னையில் தொடங்கியது | முதல் நாள் வசூலில் முந்தும் 'டியூட்' | அஜித் 64 : தீபாவளி அறிவிப்பு? | சூர்யா பட இயக்குனருடன் இணையும் விஜய் தேவரகொண்டா | எந்த நிலையிலும் உமக்கு மரணமில்லை : கண்ணதாசனை புகழ்ந்த கமல் | நான் ஒரு கிளீன் ஸ்லேட் : மமிதா பைஜு | ‛அரசன்' புரொமோ பயராக உள்ளது : அனிருத்திற்கு சிம்பு பாராட்டு | ‛ரெட்ட தல' படத்தின் கதைக்கரு இதுதான் : இயக்குனர் தகவல் |
என் படத்தை காப்பி அடித்து விட்டார்கள், என் கதையை திருடி விட்டார்கள் என்று இப்போது அடிக்கடி வழக்குகள் தொடரப்பட்டு வருகிறது. மிகப்பெரிய இயக்குனர் ஷங்கரே இந்த பிரச்னைகளை எதிர்கொண்டுள்ளார்.
70 ஆண்டுகளுக்கு முன்பே காப்பி ரைட் வழக்கில் சிக்கிய படம் சிவாஜி நடித்த 'கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி'. இந்த படத்தில் சிவாஜியுடன் டி.ஆர்.ராமச்சந்திரன், பத்மினி, ராகினி உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். ப.நீலகண்டன் இயக்கி இருந்தார், பத்மினி பிக்சர்ஸ் சார்பில் பி.ஆர்.பந்துலு தயாரித்திருந்தார். இது ஒழு முழுநீள நகைச்சுவை படம்.
இந்த படம் தயாரிக்கப்பட்ட காலகட்டத்தில் சென்னையில் 'வயமோகம்' என்ற தெலுங்கு நாடகம் நடத்தப்பட்டு வந்தது. வேதம் வெங்கடராய சாஸ்திரி என்பவர் இந்த நாடகத்தை எழுதி அவரே நடித்தும் வந்தார். இந்த நாடகத்தின் கதையும், 'கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி' படத்தின் கதையும் ஒரே மாதிரியானவை. இதனால் சிவாஜி படத்தின் மீது காப்புரிமை சட்டத்தின் கீழ் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
வழக்கின் முடிவில், முழு நாடகத்தையும் அப்படியே காப்பி அடிக்கவில்லை என்றாலும் நாடகத்தில் இடம்பெற்ற பல காட்சிகள் அப்படியே திரைப்படத்திலும் இடம்பெற்றிருந்ததால் நாடக ஆசிரியருக்கு உரிய நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதன்படி தயாரிப்பு நிறுவனம் நாடக ஆசிரியருக்கு ஒரு பெரும் தொகை நஷ்டஈடாக கொடுத்தது. படத்தின் டைட்டிலில் தன் பெயரை போட்டால் பாதி தொகை மட்டும் பெற்றுக் கொள்வதாக நாடக ஆசிரியர் சொன்னபோது அதனை தயாரிப்பு தரப்பு ஏற்கவில்லை. படம் வெளியாகி பெரும் வெற்றி பெற்றது.