அனில் ரவிபுடி படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி.பிரகாஷ் | பிளாஷ்பேக் : காணாமல் போன நல்லவள் | பிளாஷ்பேக் : கேரக்டருக்காக செத்துப்போன கருப்பு சுப்பையா | டைம் கொடுங்க.... விஜய் ஆட்சி நடத்த அனுமதிக்க வேண்டும் : சேரன் | ஸ்டாலினை சந்தித்ததில் அரசியல் இல்லை: ரஜினி தரப்பு விளக்கம் | விஜய்க்கு ஆதரவு தெரிவித்ததால் சீரியல் வாய்ப்பு போச்சு : அருண் ராஜன் | தனுஷை அணுகும் ஹிந்தி பட இயக்குனர் | இயக்குனராகும் ராம் பொத்தினேனி | சினிமாவில் திருப்புமுனை தந்தவர்களை சந்திப்பாரா முதல்வர் விஜய்? | விதியை மீறி காட்டின் நடுவே இறங்கினாரா ரகுல் ப்ரீத் சிங் ? வனத்துறை விளக்கம் |

மான் கராத்தே, கெத்து ஆகிய படங்களை இயக்கிய கிரிஷ் திருக்குமரன் இயக்கத்தில் அருண் விஜய், சித்தி இட்னானி, தன்யா ரவிச்சந்திரன் மற்றும் பலர் நடித்துள்ள படம் 'ரெட்ட தல'. இதன் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. கிரிஷ் திருக்குமரன் அளித்த பேட்டியில் ரெட்ட தல படத்தின் கதைக்கரு குறித்து கூறியதாவது, "தப்பு செய்யும்போது யார் பார்க்கிறார்கள் என்று நினைக்கக் கூடாது. யாரோ உங்களைப் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். அது கடவுளாக, காற்றாக, இயற்கையாகவும் இருக்கலாம்.
நான் ஷேக்ஸ்பியரிடம் இருந்துதான் 'ரெட்ட தல' படத்தின் கதையை வாங்கி இருக்கிறேன். தான் ஆசைப்பட்ட பெண்ணுக்காக எந்த எல்லைக்கும் போகலாம் என்று செயல்படுகிறவன் கடைசியில், அந்தப் பெண் அதற்கு தகுதியானவரா என்று யோசிக்கிறான். அது அவனுக்குள் மாற்றத்தை ஏற்படுத்துகிறது. இதுதான் ரெட்ட தல படத்தின் கதைக்கரு" என கூறியுள்ளார்.




