போலீஸாக நடிக்கும் கவுதம் ராம் கார்த்திக் | கண்ணப்பா படத்திற்கு அடித்த ஜாக்பாட் | அஜித் படத்தை தயாரிக்கும் அஜித் ரசிகர் | டேட்டிங் ஆப் சிக்கல்களை பேசவரும் 'நீ பாரெவர்' | மலையாள இயக்குனர் மீது பாலியல் புகார்: நடிகை கைது | புராணப்படத்தில் நடிக்கும் சமுத்திரகனி | 'ஹரிஹர வீர மல்லு': அவுரங்கசீப் கேரக்டரை மாற்றிய இயக்குனர் | பிளாஷ்பேக்: 3டி படத்தில் நடிக்க மறுத்த ரஜினிகாந்த் | பிளாஷ்பேக்: பெரும் தோல்வி அடைந்த பிரம்மாண்ட படம் | 'கேம் சேஞ்ஜர்' கமெண்ட்: மன்னிப்பு கேட்ட தயாரிப்பாளர் |
கவுதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடித்த என்னை அறிந்தால் படத்தில் விக்டர் என்ற வில்லன் வேடத்தில் நடித்த அருண் விஜய்க்கு அந்த வேடம் திருப்புமுனையாக அமைந்தது. அதையடுத்து ஈரம் அறிவழகன் இயக்கத்தில் அவர் நடித்த குற்றம் 23 அவருக்கு வெற்றிப்படமாக அமைந்தது. இதையடுத்து ஒரு வெப் சீஸில் அறிவழகன் இயக்கத்தில் நடிக்கிறார் அருண் விஜய். தமிழ் ராக்கர்ஸை மையமாக வைத்து இதற்கான கதை உருவாக்கப்பட்டுள்ளதாம்.
கடந்த பல ஆண்டுகளாகவே திரைப்படங்கள் தியேட்டருக்கு வந்ததும் அடுத்த கணமே தமிழ் ராக்கர்ஸ் என்ற இணையதளத்தில் திருட்டுத்தனமாக வெளியிடப்பட்டு வருகிறது. இதை தடுக்க எடுத்த எந்த முயற்சியும் பலன் அளிக்கவில்லை. தொடர்ந்து சினிமாத்துறைக்கு சவாலாகவே செயல்பட்டு வருகிறது தமிழ் ராக்கர்ஸ். இந்நிலையில் தமிழ் ராக்கர்ஸை மையமாக வைத்தே இந்த வெப்தொடரை இயக்குகிறார் அறிவழகன். இதை ஓடிடியில் வெளியிட உள்ளனர்.