சாகுந்தலம் வேடத்தில் நடிக்க பயந்த சமந்தா | விஷ்ணு விஷாலின் பதிவால் ரசிகர்கள் குழப்பம் ; அவரே தந்த விளக்கம் | விஜய்யின் லியோ படத்தில் இணையும் பஹத் பாசில் | அஜித் 62வது படத்தின் அறிவிப்பு தள்ளிப்போகிறது | எனது முதல் ஆஸ்கர் விருது ராம் கோபால் வர்மா : இசையமைப்பாளர் கீரவாணி தகவல் | கேப்டன் மில்லர் படத்தின் வீடியோ காட்சி வெளியானது : அதிர்ச்சியில் படக்குழு | அஜித் வீட்டிற்கு சென்ற சூர்யா, கார்த்தி : நேரில் சென்று ஆறுதல் | பொன்னியின் செல்வன் இசை வெளியீடு : கமல், சிம்பு பங்கேற்பு | மோகன் ஜி இயக்கத்தில் பிரஜின் தவறவிட்ட பட வாய்ப்பு | ‛என்னை அரசியலுக்குள் இழுக்காதீர்கள், சமாளிக்க முடியாது' : பாலாஜி முருகதாஸ் டுவீட் |
சினிமாவில் ஹீரோவாக நடித்து வந்த அருண்விஜய்யின் மார்க்கெட் ஒரு கட்டத்தில் டவுன் ஆனது. அந்த நேரத்தில் கவுதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடித்த என்னை அறிந்தால் என்ற படத்தில் வில்லனாக நடித்தார். அவர் நடித்த விக்டர் என்ற அந்த கேரக்டர் அவருக்கு மீண்டும் சினிமாவில் நல்லதொரு என்ட்ரியை ஏற்படுத்திக் கொடுத்தது. அதையடுத்து தொடர்ந்து ஹீரோவாக நடித்து வரும் அருண் விஜய், தற்போது ஹரி இயக்கியுள்ள யானை என்ற படத்தில் நாயகனாக நடித்திருக்கிறார். பிரியா பவானி சங்கர் நாயகியாக நடித்துள்ள இந்தப்படத்தின் டீசர் கடந்த டிசம்பர் மாதம் வெளியிடப்பட்டது. தற்போது ரிலீசுக்கு தயாராகி விட்ட இப்படத்திற்கான புரமோஷன்களில் மாவட்டம் தோறும் சென்று இயக்குனர் ஹரியும், நடிகர் அருண் விஜய்யும் மேற்கொண்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் கடலூரில் நடைபெற்ற யானை படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் பேசிய அருண் விஜய், இந்த யானை படத்திற்காக என்னால் முடிந்த அனைத்து உழைப்பையும் கொடுத்திருக்கிறேன். படமும் மிகச் சிறப்பாக வந்திருக்கிறது. அதனால் என்னுடைய வெற்றி பட வரிசையில் இந்த படமும் இடம் பிடிக்கும். அதோடு என்னை அறிந்தால் படத்தில் வில்லனாக நடித்த பிறகு கதாநாயகனாகவே நடித்து வருகிறேன். அதேசமயம் மீண்டும் நல்ல கதைகள் கிடைத்தால் வில்லனாக நடிப்பதற்கு தயாராக இருக்கிறேன் என்று தெரிவித்திருக்கிறார் அருண்விஜய்.
இந்த நிகழ்ச்சியில் இயக்குனர் ஹரி பேசும்போது, தமிழகம் முழுவதும் இந்த யானை படத்திற்காக மாவட்டம்தோறும் சென்று புரமோஷன் செய்து வருகிறோம். கமலின் விக்ரம் படம் வெற்றி பெற்றிருப்பது தமிழ் சினிமாவுக்கான வெற்றி என்று கூறியுள்ள டைரக்டர் ஹரி, நல்ல கதையை தேர்வு செய்து விட்டு சிங்கம் படத்தின் நான்காம் பாகத்தை எடுப்பதற்கான முயற்சியில் இறங்குவேன் என்றும் தெரிவித்திருக்கிறார்.