பாண்டிராஜ் படத்தில் ஹரிஷ் கல்யாண்.? | மீண்டும் மோகன்லாலை இயக்கும் தருண் மூர்த்தி ; தொடரும் பட வெற்றி விழாவில் அறிவிப்பு | வி.ஜே.சித்துவின் டயங்கரம் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது | 2025ல் வெளியான படங்களில் 7 மட்டுமே 100 கோடி வசூல் | நானிருக்க, இளையராஜா பாட்டு எதுக்கு: நிவாஸ் கே பிரசன்னா 'ஓபன் டாக்' | பாலிவுட் பிரபலங்களைக் கிண்டலடித்த 'காந்தரா சாப்டர் 1' வில்லன் | தமிழ் சினிமாவிற்கு புதிய வில்லன் | அப்பா கதாபாத்திரங்களையும் அழுத்தமாய் உருவாக்கும் மாரி செல்வராஜ் | தனுஷ் மருமகன் நடிக்கும் அடுத்த படம்: தாத்தா கஸ்தூரிராஜா தொடங்கி வைத்தார் | சித்திரம் பேசுதடி ஹீரோயினுக்கு சாருனு பெயர் வைத்தது ஏன்? மிஷ்கின் |

பாலிவுட்டில் உள்ள நடிகர்கள், நடிகைகள் அவர்களை மார்க்கெட்டிங் செய்து கொள்ள தனி குழுவையே வைத்துள்ளவர்கள். அவர்கள் எங்கே வெளியே சென்றாலும் அவர்களைப் புகைப்படம் எடுக்க 'பப்பராஸி' புகைப்படக் கலைஞர்களை வரவழைப்பது, அவர்களைப் பற்றி அடிக்கடி செய்திகளை வரவழைப்பது என அந்த குழு வேலை செய்யும்.
அதிலும் விமான நிலையம், திரைப்பட விழாக்கள், என வெளியில் செல்லும் போது படமெடுக்க வரும் புகைப்படக் கலைஞர்களுடன் சில நடிகைகள் நட்பாகப் பேசுவார்கள். ஆனால், அதெல்லாம் ஒரு தந்திரம்தான் என 'காந்தாரா சாப்டர் 1' பட வில்லன் நடிகர் குல்ஷன் தேவய்யா சமீபத்திய வீடியோ ஒன்றில் கிண்டலடித்துள்ளார். நடிகைகள் எப்படி பேசுவார்கள் என்பதையும் அவர் பேசிக் காட்டியுள்ளார். அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவியுள்ளது.
பாலிவுட்டில் இருந்த கலாச்சாரம் தற்போது தமிழ் சினிமா பக்கமும் எட்டிப் பார்த்துள்ளது. இங்குள்ள வீடியோ இன்புளூயன்சர்களிடம் பணம் கொடுத்து வீடியோ எடுத்து அவற்றைப் பிரபலமாக்கும் வேலைகளை சில நடிகையரின் மேனேஜர்கள் செய்து வருகிறார்கள்.