பிரதீப் ரங்கநாதனின் ‛எல்ஐகே' ரிலீஸ் மீண்டும் தள்ளிப்போகிறதா? | மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பேரரசு! | சூர்யா 47வது படத்தின் புதிய அப்டேட்! | ஆஸ்கர் வென்ற பாடல் பிரபலத்துடன் இணையும் பிரபாஸ்! | ‛வாரணாசி' படத்தால் நாடே பெருமைப்படும்: மகேஷ் பாபு பேச்சு | ஆறு வருடமாக பாலியல் டார்ச்சர் செய்த துணை நடிகை மீது போலீஸில் நடிகர் புகார் | பிடிவாதமாக பெட்ரோலை குடித்த அஜித்; திருப்பதியில் அஜித் எடுத்த ரிஸ்க் | பிளாஷ்பேக்: முதல் ஒளி வடிவம் பெற்ற ஜெயகாந்தனின் “உன்னைப் போல் ஒருவன்” | ஹிந்தி பட புரமோஷனில் காதலுக்கு விளக்கம் கொடுத்த தனுஷ் | ‛நூறு சாமி'க்காக காத்திருக்கும் ‛லாயர்' |

கடந்த 2012ம் ஆண்டு விக்னேஷ் சிவன் இயக்கிய போடா போடி படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக அறிமுகமானவர் சரத்குமாரின் மகள் வரலட்சுமி. அதையடுத்து ஹீரோயின் - வில்லி என மாறுபட்ட வேடங்களில் நடித்து வரும் அவர், சமீபகாலமாக தென்னிந்திய மொழிப்படங்களில் பரவலாக நடித்து வருகிறார். இந்த நிலையில் அவர் அளித்த ஒரு பேட்டியில், ‛என்னிடத்தில் சிலர், நீங்கள் எதற்காக ராதிகாவை அம்மா என்று கூப்பிடுவதில்லை என்று கேட்கிறார்கள். நான் எதற்காக அவரை அம்மா என்று கூப்பிட வேண்டும். அவர் என் அப்பாவோட இரண்டாவது மனைவி அவ்வளவுதான். அதோடு நான் ராதிகா மீது கோபத்தில் இருப்பதாகவும் எங்களுக்குள் ஒரு சரியான பேச்சுவார்த்தை இல்லை என்பது போலவும் செய்திகள் வெளியாகிறது. ஆனால் எங்களுக்குள் நல்ல ஒரு புரிதல் இருக்கிறது. மேலும் என்னுடைய அம்மாவைதான் நான் அம்மா என்று கூப்பிட முடியும். ஒருவர் தான் ஒருவருக்கு அம்மாவாக இருக்க முடியும். சோசியல் மீடியாவில் யாராவது வம்பு இழுக்க வேண்டும் என்பதற்காக எதையாவது கேட்டுக் கொண்டிருப்பார்கள். அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு எல்லாம் நான் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை' என்றும் அந்தப் பேட்டியில் தெரிவித்திருக்கிறார் வரலட்சுமி சரத்குமார்.