பாலிவுட் நடிகருக்கு ஜோடியாகும் மீனாட்சி சவுத்ரி | நடிகர் சிவகுமாருக்கு கவுரவ டாக்டர் பட்டம் | 'அவதார் ' பார்க்க 10 லட்சம் இந்தியர்கள் ஆர்வம் | பிளாஷ்பேக் : ரீமேக்கில் வெள்ளி விழா கொண்டாடிய படம் | பிளாஷ்பேக் : ரீமேக்கில் தோல்வியடைந்த முதல் படம் | திடீர் நடிகையான தயாரிப்பாளர் | ஓடிடியில் நேரடியாக வெளியாகும் ஸ்மிருதி வெங்கட் படம் | சர்வதேச திரைப்பட விழாவில் விருது வென்ற தமிழ் படம் | ‛டியூட்'-ல் இடம் பெற்ற ‛கருத்த மச்சானை' நீக்க நீதிமன்றம் உத்தரவு | புயல் மிரட்டும் வேளையிலும் இந்த வாரம் 12 படங்கள் ரிலீஸ் |

சின்னக்கலைவாணர் என அனைவராலும் அழைக்கப்பட்ட நகைச்சுவை நடிகர் விவேக், கடந்த சில தினங்களுக்கு முன் மாரடைப்பு காரணமாக திடீரென மரணமடைந்தார். இது திரையுலகினர் மட்டுமின்றி பொதுமக்கள் மத்தியிலும் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. விவேக் ஒரு இயற்கை ஆர்வலர்.. அதிக அளவில் மரங்களை நட்டு இயற்கையை பாதுகாக்க விரும்பியவர்.. அதனால் அவர்மீது அபிமானம் கொண்ட பலரும் தங்கள் பகுதியில் மரக்கன்றுகளை நட்டு அவருக்கு காணிக்கையாகவும் அஞ்சலியாகவும் செலுத்தி வருகின்றனர்.
இந்தநிலையில் நடிகர் அருண் விஜய்யும் தனது வீட்டில் மரக்கன்றுகளை நட்டு வைத்து தனது இறுதி மரியாதையை விவேக்கிற்கு செலுத்தியுள்ளார். தானும், தனது தந்தை விஜயகுமார் மற்றும் மகன் ஆர்ணவ் ஆகிய மூவரும் மரம் நடும் புகைப்படங்களை தனது சோஷியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ளார் அருண்விஜய்.. மேலும், “பூமியை பசுமையாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பதன் முக்கியத்துவத்தை, அடுத்த தலைமுறைக்கு அழகாக கற்றுக்கொடுத்தீர்கள்.. எங்கள் எல்லோருக்கும் தூண்டுகோலாக இருந்ததற்கு நன்றி சார்” என கூறியுள்ளார் அருண்விஜய்.