பாலிவுட் படப்பிடிப்பில் உட்காருவதற்கு நாற்காலி கூட கிடைக்காது; துல்கர் சல்மான் பகீர் தகவல் | 'திரிஷ்யம் 3' படப்பிடிப்பை நிறைவு செய்த மோகன்லால் | ரியோ என பெயரை மாற்றிய நடிகர் ரியோ ராஜ்! | 5 ஆண்டுகளாக கதை குறித்த ஆலோசனையில் ஈடுபட்டு வரும் கீர்த்தி சுரேஷ்! | மலேசியா முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்த அஜித்குமார்! | தனுசை ஆச்சரியப்பட வைத்த இயக்குனர் விக்னேஷ் ராஜா! | 96 பட இயக்குனரிடம் கதை கேட்ட நானி | லிங்குசாமி, சரண் புதிய படத்திற்காக கூட்டணி | இதெல்லாம் டிசம்பர் மாதம் ரிலீஸ் : ரிசல்ட் எப்படி இருக்குமோ? | சின்மயி மன்னிப்பு : இயக்குனர் பேரரசு பதிலடி |

உதயா நடித்த அக்யூஸ்ட் படம் ஆகஸ்ட் 1ம் தேதி வெளியாகிறது. இந்த பட விழாவில் பேசிய உதயா, 'கடந்த 25 ஆண்டுகளாக நான் சினிமாவில் இருக்கிறேன். திருநெல்வேலி நான் ஹீரோவாக நடித்த முதல் படம், அதிலிருந்து பல வெற்றி தோல்வி, ஏற்ற இறக்கங்களை பார்த்துவிட்டேன். ஆனாலும், நண்பர்கள், நல்லவர்கள் உதவியால் தொடர்ந்து நடிக்கிறேன். இந்த படத்தில் நான் மட்டும் ஹீரோ அல்ல, அஜ்மல், யோகிபாபுவும் இருக்கிறார்கள். யோகிபாபுவால் எந்த பிரச்னையும் இல்லை. அவ்வளவு ஒத்துழைப்பு கொடுத்தார்.
நான் முன்னேற வேண்டும் என அதிகமாக நினைத்தது 2 பேர். ஒருவர் என் அம்மா, அடுத்து, திருநெல்வேலி படத்தில் என்னுடன் நடித்த விவேக் சார். அந்த இரண்டு பேரும் இன்றைக்கு இல்லை. அவரின் முக்கியமான 6 நண்பர்களில் ஒருவர். என்னுடைய அனைத்து சினிமா விழாக்களுக்கும் அவர் வந்து வாழ்த்துவார். நீ ஜெயிக்கணும்னு பாசிட்டிவ்வாக பேசுவார். அவர் இல்லாதது வருத்தம். விவேக் மறைந்தபின் நடந்த முதல் நினைவுநாள் விழாவில் அவர் வீடு இருக்கும் விருகம்பாக்கம் சாலைக்கு அவர் பெயர் வைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தேன். பூச்சிமுருகன் மூலமாக அந்த விஷயம் அரசுக்கு சென்றது. இன்றைக்கு அந்த சாலை சின்ன கலைவாணர் விவேக் பெயரில் உள்ளது. முதல்வருக்கும் நன்றி. அதை உருவாக்க துரும்பாக இருந்ததற்கு சந்தோஷப்படுகிறேன்' என்றார்.




