ஒரு முறை இல்லை, பலமுறை வருவது தான் காதல்! - நடிகை தமன்னா | 'ஜெயிலர் 2' படத்தின் முதல் பாடல் எப்போது? | மீண்டும் இணையும் 'ரௌத்திரம்' பட கூட்டணி! | அபிஷன் ஜீவின்த் படத்தில் இரண்டு நாயகிகள்! | தனுஷ் படம் நின்றது ஏன்? இயக்குனர் ராம்குமார் விளக்கம் | மூன்றாம் பாலினத்தவர்கள் கடவுளின் குழந்தைகள்: ஆசிம் கெதர்பால் | வாரிசு நட்சத்திரங்களால் பல வாய்ப்புகளை இழந்தேன் ; கிர்த்தி சனோன் வேதனை | 'திரிஷ்யம் 2'வில் இடம்பெறாத கலாபவன் சாஜன் 'திரிஷ்யம் 3'ல் ரீ என்ட்ரி | நான் செட்டாகவில்லை ; அமீர்கானிடம் ஓப்பனாக கூறிய சாய் பல்லவி | கிளாமர் புகைப்படங்களைப் பகிர்ந்து அதிர்ச்சி தந்த பூஜா ஹெக்டே |

பிரபாஸின் கல்கி 2898 ஏடி படத்திலிருந்து சமீபத்தில் நீக்கப்பட்ட பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே, தற்போது அட்லி இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கும் படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் மெட்டா ஏஐ-க்கு குரல் கொடுத்த முதல் இந்திய பிரபலம் என்ற சாதனையை தற்போது அவர் படைத்துள்ளார்.
இதுபற்றி தீபிகா வெளியிட்ட பதிவில், ‛‛மெட்டா ஏஐ-யில் நானும் ஒரு அங்கமாகி உள்ளேன். என் குரல் நீங்கள் இனி ஆங்கிலத்தில் நீங்கள் வாய்ஸ் சேட் செய்யலாம்'' என தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் வாட்ஸ் அப், ரேபான் மெட்டா, ஸ்மார்ட் கண்ணாடிகள், இன்ஸ்டாகிராம் மற்றும் பல தலங்களில் அவரது தனித்துவமான குரல் ஒருங்கிணைக்கப்படுகிறது. இதற்கு முன்பு மெட்டா ஏஐக்கு ஜான் சீனா, ஜுடி டென்ச் உள்ளிட்ட பிரபலங்கள் குரல் கொடுத்திருந்தார்கள். இப்போது தீபிகாவின் குரலும் இணைக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் இந்தியா, அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளில் இந்த மெட்டா ஏஐ மூலம் தீபிகாவின் குரல் ஒலிக்கப் போகிறது.