ரஜினியின் அடுத்த படத்தை தயாரிப்பது யார்? | இப்படியெல்லாம் ஐடியா கொடுப்பது யாரு? | 2025 தீபாவளி : 3 இளம் ஹீரோக்களின் போட்டி | சல்மான் கான் கமெண்ட்டுக்கு பதிலளிப்பாரா ஏஆர் முருகதாஸ் ? | காதலரைக் கரம் பிடிக்க 15 வருடங்கள் காத்திருந்த கீர்த்தி சுரேஷ் | தமிழ் இயக்குனர்களைக் கவர்ந்த நாகார்ஜுனா 'ஹேர்ஸ்டைல்' | ஓடிடியில் நேரடி படங்கள், வெப் தொடர்கள் அறிவிப்பு | நடிப்பில் விக்ரமை வெல்ல தொடர்ந்து போராடுவேன்: துருவ் விக்ரம் | அம்மாவின் பச்சை நிற கண்ணை பெற்ற அழகான மகள்: அக்ஷராவுக்கு கமல் பிறந்த நாள் வாழ்த்து | பிளாஷ்பேக்: கதை நாயகனாக முதல் படத்தில் தோற்ற எஸ்.எஸ்.ராஜேந்திரன் |
சிவா இயக்கத்தில் சூர்யா, திஷா பதானி, பாபி தியோல் நடித்துள்ள படம் கங்குவா. ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தில் சூர்யா 10க்கு மேற்பட்ட கெட்டப்புகளில் நடித்துள்ளார். தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ள இந்த படம் வருகிற அக்டோபர் 10ம் தேதி ஆயுத பூஜை அன்று திரைக்கு வருகிறது. தற்போது படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் துரிதமாக நடைபெற்று வரும் நிலையில், கங்குவா படத்தின் பாடலாசிரியர் விவேகா இப்படம் குறித்து தனது எக்ஸ் தளத்தில் ஒரு பதிவு போட்டுள்ளார்.
அதில், ‛‛கங்குவா படம் பார்த்து மெய்சிலிர்த்தேன். இந்திய சினிமாவில் பெருமைமிகு பிரமாண்டம். இயக்குனர் சிவா நம்மை வேறு உலகிற்கு அழைத்து செல்கிறார். சூர்யா நடிப்பு உச்சம். இப்படத்தில் நானும் ஒரு அங்கமாக இருப்பதில் பெருமை கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.
அவரைத் தொடர்ந்து தயாரிப்பாளர் தனஞ்செயனும், ‛‛கங்குவா படத்தின் முதல் பாதியை மட்டுமே நான் பார்த்தேன். அதுவே வேறு லெவலில் உள்ளது'' என்று தெரிவித்துள்ளார்.