அண்ணாமலைக்கு பிடித்த ‛இட்லி கடை' | 'மகுடம்' படத்தை இயக்கும் விஷால்: வைரலாகும் புகைப்படங்கள் | 'மகாபாரதம்' தொடரில் கர்ணனாக நடித்த நடிகர் பங்கஜ் தீர் காலமானார் | மாதவனுடன் மோதும் நிமிஷா | கெனிஷாவின் இசை ஆல்பத்திற்காக பாடலாசிரியர் ஆனார் ரவி மோகன் | பிளாஷ்பேக் : பரப்பன அக்ரஹார சிறையில் தமிழ் படம் | பிளாஷ்பேக் : 'ராஷோமோன்' பாதிப்பில் உருவான 'அந்த நாள்' | கார் ரேஸில் தொடர்ந்து பயணிக்க அஜித் முடிவு | காமெடி நடிகை ஆர்த்தி தந்தை காலமானார் | நீ தனியாக ஜெயித்து காட்டு: மகனை தனித்துவிட்ட விக்ரம் |
மறைந்த நடிகர் விஜயகாந்த், தற்போது விஜய் நடித்துள்ள கோட் படத்தில் ஏஐ டெக்னாலஜி மூலம் நடிக்க வைக்கப்பட்டுள்ளார். இது குறித்த தகவல்களை ஏற்கனவே படக்குழு வெளியிட்டுள்ளார்கள். அதையடுத்து விஜயகாந்தின் மகனான சண்முக பாண்டியன் நடித்து வரும் படைத்தலைவன் என்ற படத்திலும் இதே ஏஐ தொழில் நுட்பத்தில் விஜயகாந்த்தை நடிக்க வைத்திருப்பதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் தற்போது விஜய் மில்டன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்திருக்கும் மழை பிடிக்காத மனிதன் படத்திலும் விஜயகாந்த் நடித்திருக்கிறார்.
இதுகுறித்து இயக்குனர் விஜய் மில்டன் கூறும்போது, ‛‛மழை பிடிக்காத மனிதன் படத்தில் விஜயகாந்த் இருக்கிறார். ஆனால் அவர் எப்படி இருப்பார் எப்படி வருவார் என்பதை இப்போதே சொல்ல முடியாது. அது குறித்த சஸ்பென்ஸை உடைக்க வேண்டாம் என்று நினைக்கிறேன் என்கிறார் .
விஜய் நடித்துள்ள கோட் படம் செப்டம்பர் 5ம் தேதி வெளியாகும் நிலையில், இந்த மழை பிடிக்காத மனிதன் ஜூலை மாதமே வெளியாவதால் கோட் படத்துக்கு முன்பே இந்த படத்தில் விஜயகாந்தை அவரது ரசிகர்கள் பார்க்கலாம் என்று தெரிகிறது. விஜயகாந்த் உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தபோதே அவரை மழை பிடிக்காத மனிதன் படத்தில் நடிக்க வைக்க முயற்சி செய்தார் விஜய் மில்டன். என்றாலும் அப்போது அவரது உடல்நிலை ஒத்துழைக்கவில்லை. அதன் காரணமாகவே ஏஐ டெக்னாலஜி மூலம் விஜயகாந்தை நடிக்க வைத்துள்ளார் விஜய் மில்டன்.