96 பட இயக்குனரிடம் கதை கேட்ட நானி | லிங்குசாமி, சரண் புதிய படத்திற்காக கூட்டணி | இதெல்லாம் டிசம்பர் மாதம் ரிலீஸ் : ரிசல்ட் எப்படி இருக்குமோ? | சின்மயி மன்னிப்பு : இயக்குனர் பேரரசு பதிலடி | கைவசம் 3 படங்கள் : தமிழில் கால் பதிக்க நினைக்கிறார் கிர்த்தி ஷெட்டி | கிண்டல், கேலி, நெகட்டிவ் எண்ணம் : சமூக வலைதளங்களை தவிர்க்கும் திரைபிரபலங்கள் | நல்ல படம் பண்ணிட்டு ரிட்டையர்டு : கமல்ஹாசன் | விஜய் பட இயக்குனர் உடன் இணையும் சல்மான் | பாண்டிராஜ் படத்தில் ஜெயராம், ஊர்வசி | உறவு பிரியாமல் இருக்க 'பூதசுத்தி விவாஹம்' செய்த சமந்தா |

அஜித்தின் அடுத்த படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கப் போகிறார், ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தயாரிக்கப் போகிறார் என தகவல். ஆனால், இன்னமும் அதிகாரப்பூர்வ செய்தி வெளியாகவில்லை. அதற்குள், தனி ஆபீஸ் போட்டு பட டிஸ்கசன் பணிகளை ஆதிக் தொடங்கிவிட்டாராம். துபாய் கார் பந்தயத்தில் அஜித் பிஸியாக இருப்பதாலும், சம்பள விஷயத்தில் இன்னும் சில சிக்கல்கள் இருப்பதாலும் பட அறிவிப்பு தள்ளிபபோவதாக தகவல்.
இந்த படத்துக்கு 180 கோடிவரை சம்பளம் வாங்கப்போகிறார் அஜித். இது அவருடைய சினிமா கேரியரில் இதுவரை வாங்காத சம்பளம் என்கிறார்கள். தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் பட்டியலில் முதலிடத்தில் ரஜினி இருக்கிறார். அடுத்து விஜய் இருந்தார். இப்போது அவர் அரசியலுக்கு செல்வதால், அடுத்த ஆண்டு தமிழில் அதிக சம்பளம் வாங்கும் பட்டியலில் 2வது இடத்துக்கு அஜித் முன்னேறிவிடுவார் என்று கூறப்படுகிறது.
கமல்ஹாசன் தவிர மற்ற யாரும் இன்னமும் 100 கோடி சம்பளத்தை தாண்டவில்லை. அதேபோல் குட்பேட்அக்லி வெற்றி காரணமாக, ஆதிக் சம்பளரும் 10 கோடிக்கு மேல் அதிகரித்துள்ளதாம். நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் சம்பளம், படப்பிடிப்பு செலவே 270 கோடியை தாண்டும் என்பதால், அஜித்தின் இந்த படம் பிஸினஸ் ரீதியாக பெரிய ரிஸ்க் என்று சொல்லப்படுகிறது.




