தமிழ் சினிமாவில் இறங்கு முகமான ஓடிடி வியாபாரம் | ஜீவன் இல்லாத கதாபாத்திரங்களை தவிர்க்கிறேன்: பவ்யா திரிகா | வாட்ஸ்-அப்பில் வந்த லிங்க்கால் ஹேக் ஆன போன் : அபிஷேக் எச்சரிக்கை | கிங் படப்பிடிப்பில் ஷாரூக்கான் காயம் | ஒவ்வொரு தவறும் பாடம் கற்பிக்கிறது : தமன்னாவின் தத்துவப் பதிவு | ஸ்டன்ட் நடிகர் உயிரிழப்பு எதிரொலி : அக்ஷய்குமார் செய்த அருமையான செயல் | ஜூலை 22ல் கூலி படத்தின் மூன்றாவது பாடல் ரிலீஸ் | அடுத்த நல்ல வசூலுக்கு 80 நாட்களாகக் காத்திருக்கும் தமிழ் சினிமா | அடுத்து அஜித் படமா... : ஆதிக்ரவிச்சந்திரன் பதில் | டாப் 10… முதல் இரண்டு இடங்களில் 'குபேரா' |
எஸ்.விஜயசேகரன் இயக்கத்தில் நபி நந்தி, சரத், லப்பர் பந்து படத்தில் நடித்த சுவாசிகா, பூனம் கவுர், வேல.ராமமூர்த்தி, சங்கிலி முருகன், மொட்டை ராஜேந்திரன், எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்டோர் நடித்த படம் போகி. படம் குறித்து இயக்குனர் கூறுகையில் ''6000 அடி உயரத்தில் எந்த தொழில்நுட்ப வளர்ச்சியும் இல்லாத மலை கிராமத்தில் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் வசித்து வருகிறார்கள்.
சைக்கிள் கூட செல்ல முடியாத அந்த மக்களுக்கு கல்வியும் மருத்துவமும் கனவாக இருக்கிறது. அப்படிப்பட்ட சூழ்நிலையில் ஹீரோ, தனது தங்கை மூலமாக தனது கிராமத்தின் மருத்துவ தேவையை சரி செய்ய விரும்புகிறான். சில கிலோமீட்டர் கால்நடையாக சென்று படித்துவிட்டு வீடு திரும்பும் அந்த தங்கை மாநிலத்திலேயே முதல் மதிப்பெண் பெற்று மருத்துவக் கல்லூரிக்கு செல்ல தயாராகிறார். மலை கிராமமே பெரும் கனவோடு அவளை
வழி அனுப்பி வைக்கிறார்கள். இறுதியில் அவர் மருத்துவம் படித்து கிராம மக்களுக்கு சேவை செய்தாரா? என்ன நடந்தது என்பது கதை. இது ஒரு உண்மை சம்பவம் பின்னணியில் உருவாகி உள்ளது' என்கிறார்.