ஹைதராபாத்தில் அனிருத் நடத்தும் 'கூலி' இசை நிகழ்ச்சி! | ரியல் பிரபாஸூடன் நடித்த நிதி அகர்வால்! | ஜீவாவின் 46வது படத்தை இயக்கும் கே.ஜி.பாலசுப்பிரமணி! | ஆகஸ்ட் 29ல் தனது பிறந்த நாளில் குட் நியூஸ் வெளியிடும் நடிகர் விஷால்! | கமலின் 237வது படத்தில் நடிக்கும் கல்யாணி பிரியதர்ஷன்! | நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரைக்கு வரும் அதர்வாவின் தணல்! | நாளை ரீரிலீஸ் ஆகும் பாட்ஷா படம்! | இயக்குனர் வேலு பிரபாகரன் காலமானார் | ஓடிடியில் இந்த வாரம் ரிலீஸ் என்ன...? : ஒரு பார்வை! | போலீசார் மீதான மரியாதை அதிகரித்துள்ளது : திரிதா சவுத்ரி |
மலையாள நடிகையான சுவாசிகா தமிழில் ‛வைகை, கோரிப்பாளையம்' உள்ளிட்ட படங்களில் நடித்தார். 15 ஆண்டுகளாக அவர் நடித்து வந்தாலும் கடந்தாண்டு வெளிவந்த ‛லப்பர் பந்து' படம் மூலம் தான் அதிகம் பிரபலமானார். இந்த படத்திற்கு பின் தமிழில் நிறைய பட வாய்ப்புகள் வருகிறது. சமீபத்தில் மாமன், ரெட்ரோ படத்தில் நடித்திருந்தார். தற்போது சூர்யா 45, விஜய் ஆண்டனியின் படம் என சில படங்கள் கைவசம் வைத்துள்ளார்.
இந்நிலையில் சுவாசிகா அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது, "சூர்யா 45வது படத்தில் ரொம்ப வித்தியாசமான தோற்றத்தில் நடித்துள்ளேன். இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி, என்னிடம் 'இதுற்கு முன் நீங்கள் நடித்த எந்தவொரு கதாபாத்திரம் மாதிரியும் இதில் இருக்காது என்று கூறி தான் இந்த வாய்ப்பை தந்தார். மேலும் எனது தோழில் ஒருவர் ஹிந்தியில் ஷாருக்கான் 'லப்பர் பந்து' படத்தை பார்த்த பிறகு, 'அந்தப் படத்தை ரீமேக் செய்ய விரும்புகிறேன் என்று கூறினால், என்னுடைய மனைவி கேரக்டரில் அதே பொண்ணு தான் நடிக்கணும்னு சொல்வாரு என சொன்னார். அவர் சொன்னது போல ஷாரூக்கான் அந்த படத்தை பார்ப்பார், கூப்பிடுவார் என நம்புகிறேன், பார்ப்போம்" என நெகிழ்ச்சி உடன் தெரிவித்துள்ளார்.