சந்தானத்தின் ‛லவ் பைட்' | ஆகஸ்ட் மாதத்திற்கு தள்ளிப்போகும் துல்கர் படம் | பிளாஷ்பேக் : போலீஸாக சில்க் ஸ்மிதா | பிளாஷ்பேக் : ஒற்றைக்காலில் நடித்தே உயிர் விட்டவர் | பாடல் சர்ச்சை : மகளிர் ஆணையம் முன்பு ஆஜராகி மன்னிப்பு கேட்ட நோரா பதேகி | சல்மான்கான் - நயன்தாரா படத்தின் டைட்டில் இதுதானா ? | கொல்லப்பட்ட விலங்கு நல ஆர்வலர் : கண்ணீருடன் வீடியோ வெளியிட்ட பார்வதி | திரிஷ்யம் 3 படத்தின் சென்சார் சான்றிதழ் வெளியானது | மக்கள் மன்னிக்கவே மாட்டார்கள் : விஜய்க்கு ஆதரவாக திரையுலகினர் குரல் | 50வது நாளில் 'யூத்' |

பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் சூரி, ஐஸ்வர்யா லட்சுமி, ராஜ்கிரண், சுவாசிகா, பால சரவணன் உள்ளிட்ட பலரது நடிப்பில் கடந்த மே 16ம் தேதி திரைக்கு வந்த படம் 'மாமன்'. பாஸிடீவான விமர்சனங்களை பெற்ற இந்த படம் பாக்ஸ் ஆபிஸில் 35.90 கோடி ரூபாய் வசூல் செய்திருக்கிறது. இந்த நிலையில் இந்த படத்தில் தனது அக்காவாக நடித்த சுவாசிகாவின் நடிப்பு குறித்து இணையப் பக்கத்தில் ஒரு நெகிழ்ச்சி பதிவு வெளியிட்டுள்ளார் சூரி.
அந்த பதிவில், 'என் அன்பும் நன்றிகளும் கிரிஜா அக்காவுக்கு. மாமன் படத்தில் உங்கள் நடிப்பு என் மனதை ஆழமாக கவர்ந்தது. அக்கா, லட்டு அம்மா, மகள், மனைவி ஒவ்வொரு வேடத்திலும் நீங்கள் காட்டிய திறமை ஒளிர்ந்தது. நீங்கள் நடித்த ஒவ்வொரு காட்சிகளிலும் உண்மையான உணர்வுகள் இருந்தன. அதுதான் இப்படத்தின் சிறப்பு. உங்களுடன் இணைந்து நடித்தது எனக்கு நல்ல அனுபவமாகவும் போட்டியாகவும் இருந்தது. இந்திய சினிமாவுக்கு கிடைத்த அரிய செல்வம் நீங்கள். உங்களிடமிருந்து கற்கும் இந்த பயணம் தொடரும்,' என்று பதிவிட்டுள்ளார் சூரி.
அதே போன்று பால சரவணன் குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், 'ஒரு சிறந்த நகைச்சுவை நடிகராக மட்டுமின்றி இனிவரும் காலங்களில் எந்த கதாபாத்திரத்திலும் சிறப்பாக நடித்து மிகச் சிறந்த நடிகராக உயர்வார் தம்பி பால சரவணன். மாமன் படத்தில் சில காட்சிகளில் மட்டுமே அவர் வந்ததாக சொன்னீர்கள். அது உண்மைதான். ஆனால் அவர் வந்த குறைந்த காட்சிகளிலும் அனைவரது மனதையும் கவர்ந்து விட்டார். இதை யாராலும் மறுக்க முடியாது. நான் தம்பி பாலாவின் மிகப்பெரிய ரசிகன். எனக்கு ஆதரவாக தூணாக அவர் இருந்தார். இன்னும் பல படங்களில் அவருடன் வேலை செய்ய வேண்டும். என் அன்பும் நன்றியும் தம்பி,' என பால சரவணன் குறித்தும் பதிவிட்டுள்ளார் சூரி.