தீபாவளிக்கு ஜனநாயகன் அப்டேட் ஏனில்லை | பொங்கலுக்கு நடிகர் சங்க கட்டடம் திறப்பு : விஷால் திருமணம் எப்போது | பிக்பாஸில் வந்து விட்டால் மட்டும் நடிகையாகி விட முடியாது: தர்ஷிகா | ஹீரோயின் ஆனார் 'அரண்மனை' ஹர்ஷா | பிளாஷ்பேக் : சென்டிமெண்டில் அமலாவை கவிழ்த்த டி.ராஜேந்தர் | பிளாஷ்பேக்: 2 ஹீரோயின்கள் மோதிய 'மாங்கல்யம்' | சுற்றுலாவில் கீர்த்தி சுரேஷின் தலை தீபாவளி | காதலருடன் தீபாவளி கொண்டாடிய சமந்தா | ரூ.83 கோடி வசூலித்த ‛டியூட்' : 'ஹாட்ரிக்' 100 கோடியில் பிரதீப் ரங்கநாதன் | கர்நாடகாவில் 200 கோடி வசூல் சாதனையில் 'காந்தாரா சாப்டர் 1' |
'டூரிஸ்ட் பேமிலி' படத்தை அடுத்து சசிகுமார் நடித்துள்ள படம் 'பிரீடம்'. சத்திய சிவா இயக்கி உள்ள இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என 5 மொழிகளில் வெளியாகிறது. இப்படத்தில் சசிகுமாருடன் இணைந்து லிஜோமோல் ஜோஸ், மாளவிகா, போஸ் வெங்கட் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள். ஜிப்ரான் இசையமைத்திருக்கிறார்.
தற்போது இப்படத்தின் டீசர் வெளியாகி இருக்கிறது. அதில் இலங்கை தமிழர்கள் ஒரு பக்கம் சிறையிலும், இன்னொரு பக்கம் அகதிகளாகவும் கடும் துன்பங்களை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். அப்போது சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சசிகுமார் உள்ளிட்ட பலர் அங்கிருந்து தப்பிக்கிறார்கள். இதன் காரணமாக போராட்டம், வன்முறை என வெடிக்கும் காட்சிகள் இந்த டீசரில் இடம் பெற்றுள்ளது. இந்த ஒன்றரை நிமிட டீசர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதோடு இந்த பிரீடம் படம் வருகிற ஜூலை 10ம் தேதி திரைக்கு வருவதாகவும் அறிவித்துள்ளார்கள்.