நான் நடிக்க ஆசைப்பட்டேன், சூரி நடிக்கப் போகிறார் : சசிகுமார் | டாக்சிக்கால் கடும் சர்ச்சை : இன்ஸ்டாகிராம் விட்டு விலகிய 'டாக்சிக்' நடிகை | அனுமதி பெற்றே சிரஞ்சீவி படத்தில் இளையராஜா பாடல் | 2026 : ஓடிடியில் நேரடியாக வெளியான முதல் படம் 'அனந்தா' | பொங்கல் போட்டியில் விலகிய 'திரௌபதி 2, ஜாக்கி' | ஜனநாயகன் தாமதம் ஆனாலும், சரியான நேரத்தில் வெளியாகும் : நடிகர் கார்த்தி | ஜனநாயகன் சென்சார் பிரச்னை.... : எல்லாம் நன்மைக்கே என்கிறார் விமல் | பிளாஷ்பேக்: நடிகர் முத்துராமனின் திரைப்பயணத்திற்கு திருப்புமுனையாய் அமைந்த “நெஞ்சில் ஓர் ஆலயம்” | தெலுங்கில் குத்தாட்டம் போட்ட சான்வி மேக்னா | 'தெறி' ரீரிலீஸ் திடீர் ஒத்திவைப்பு |

இந்தியாவின் முதல் சூப்பர் ஹீரோவாக அறியப்படும் முகேஷ் கன்னா, இந்தியாவின் விடுதலைக்காக போராடிய வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில், தமது தேசபக்திப் பாடல் தொகுப்பான 'கிராந்திகரி பஹேலி'யின் இரண்டாவது பாடலான 'பஹேலி கீத் 2' என்ற பாடலை வெளியிட்டுள்ளார்.
இந்தப் பாடல் சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாழ்க்கையையும் அவர்களின் வரலாற்றுப் படைப்புகளையும் ஒரு புதிர் வடிவில் காட்டுகிறது. இந்தப் பாடலில், முகேஷ் கன்னா குழந்தைகளுடன் சேர்ந்து புதிர்களைத் தீர்க்கிறார்.
'பஹேலி கீத் 2' பாடலில் சந்திரசேகர் ஆஜாத், வீர் சாவர்கர், மங்கள்பாண்டே, அஷ்பக் உள்ளா கான் ஆகியோரின் கதைகள் இடம்பெறுகின்றன. இந்த பாடல் தொடரின் முதல் பகுதியில், ஜான்சி ராணி லட்சுமிபாய், சஹீத் ராஜ்குரு, சுக்தேவ், பகத்சிங், சுபாஷ் சந்திர போஸ், துர்ரம் கான் உள்ளிட்ட வீரர்களின் வாழ்க்கைச் சுருக்கங்கள் இடம்பெற்றிருந்தன.
பாடல் வெளியீட்டு விழாவில் முகேஷ் கன்னா பேசியதாவது: 'ஜெய்ஹிந்த்' இயக்கத்தின் மூலம், நாட்டின் சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு தியாகி அந்தஸ்து வழங்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக அரசாங்கத்திடம் கோரி வருகிறோம். இந்த பாடலின் மூலம் நமது உண்மையான ஹீரோக்களை, தேசத்திற்காக இள வயதில் தங்கள் உயிரை தியாகம் செய்தவர்களை பற்றி இளைஞர்கள் அறிந்து கொள்ள முடியும். இந்த இசை தொடர் மூலம் புரட்சியாளர்கள் அனைவரையும் நினைவு கூர்ந்து, அவர்களின் பெயர்களை நிலைநாட்டுவோம், குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் இதயங்களில் அவர்களின் பெயர்களைப் பதிப்போம். இவ்வாறு அவர் பேசினார்.