பிரதீப் ரங்கநாதனின் ‛எல்ஐகே' ரிலீஸ் மீண்டும் தள்ளிப்போகிறதா? | மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பேரரசு! | சூர்யா 47வது படத்தின் புதிய அப்டேட்! | ஆஸ்கர் வென்ற பாடல் பிரபலத்துடன் இணையும் பிரபாஸ்! | ‛வாரணாசி' படத்தால் நாடே பெருமைப்படும்: மகேஷ் பாபு பேச்சு | ஆறு வருடமாக பாலியல் டார்ச்சர் செய்த துணை நடிகை மீது போலீஸில் நடிகர் புகார் | பிடிவாதமாக பெட்ரோலை குடித்த அஜித்; திருப்பதியில் அஜித் எடுத்த ரிஸ்க் | பிளாஷ்பேக்: முதல் ஒளி வடிவம் பெற்ற ஜெயகாந்தனின் “உன்னைப் போல் ஒருவன்” | ஹிந்தி பட புரமோஷனில் காதலுக்கு விளக்கம் கொடுத்த தனுஷ் | ‛நூறு சாமி'க்காக காத்திருக்கும் ‛லாயர்' |

வினோத் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் ஜனநாயகன் படம் அரசியல் கதையில் உருவாகி வருவதாக தகவல்கள் வெளியாகி வந்த நிலையில், விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு அப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியானபோது அவர் போலீசாக நடித்திருப்பது தெரியவந்தது. என்றாலும் இந்த படத்தில் விஜய் நிறையவே அரசியல் பேசி உள்ளார். மேலும் இந்த படத்தில் பாலிவுட் நடிகர் பாபி தியோல் வில்லனாக நடித்திருக்கிறார்.
அவர் அளித்த ஒரு பேட்டியில், ‛‛ஜனநாயகன் படத்தில் நடித்தபோது நடந்த சில நிகழ்வுகளை தெரிவித்திருக்கிறார். அதில் , விஜய் படத்தில் நான் நடிக்கிறேன் என்ற செய்திகள் வெளியானதுமே பலரும் என்னை தொடர்பு கொண்டு அந்த படத்தை பற்றியும், நான் நடிக்கும் கேரக்டர் பற்றியும் ஆர்வமாக கேட்டார்கள். அதோடு, ஜனநாயகன் படப்பிடிப்பு தளங்களுக்கு ஏராளமான ரசிகர்கள் விஜயை காண படை எடுத்தார்கள். இதனால் பல சமயங்களில் படப்பிடிப்பு நடத்த முடியாமல் பேக்கப் செய்யப்பட்டது. இப்படி ரசிகர்கள் தொடர்ந்து படை எடுத்ததால் பெரும்பாலான காட்சிகளை ஸ்டுடியோவுக்குள்ளேயே படமாக்கப்பட்டது. இப்படி விஜய் படத்தின் படப்பிடிப்பு நள்ளிரவில் ரகசியமாக நடந்தாலும் கூட அங்கு ஆயிரக்கணக்கில் ரசிகர்கள் படையெடுத்தது வியப்பாக இருந்தது என்று கூறியிருக்கிறார்.