பவழ மல்லி Vs முட்டை கலக்கி - 'யூத்'களுக்குள் கடும் போட்டி | தோழிகளுடன் பால் விளையாடி கையை முறித்துக் கொண்ட யாஷிகா | பேஷஸ் ஆப் கர- தனுஷின் கர படத்தின் முன்னோட்ட வீடியோ வெளியீடு | வட அமெரிக்காவில் கல்கி 2898 ஏடி படத்தின் வசூல் சாதனையை முறியடித்த துரந்தர் 2 | அண்ணன் வாரிசுகளின் பட பூஜைக்கு வந்து வாழ்த்திய பவன் கல்யாண் | முன்னணி இயக்குனர்களின் வாட்ஸ் ஆப் குழு ‛ரெய்னா' : அர்த்தம் தெரியுமா? | இது எனக்கு புது உலகம் : முதல்முறையாக வெப்சீரிஸில் நடிக்கும் சம்யுக்தா | சிவகார்த்திகேயனின் தங்கையாக நடிக்கும் மாளவிகா மனோஜ் | சினிமாக்காரர்களுக்கு ஞாயிறு கட்டாயம் விடுமுறை வேண்டும் : நிவின்பாலி வலியுறுத்தல் | சிபிஐ 6ம் பாகம் வருகிறது : இயக்குனர் மது தகவல் |

நடிகர் ரஜினிகாந்த் நேற்று தன்னுடைய 75வது பிறந்தநாளைக் கொண்டாடினார். அவருக்கு இந்தியப் பிரதமர் மோடி, தமிழக கவர்னர் ஆர்என் ரவி, தமிழக முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, நடிகர் கமல்ஹாசன் மற்றும் பல அரசியல் பிரமுகர்கள், சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
பிரதமர் மோடி, தமிழில் பதிவிட்டு வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தார். அவரது வாழ்த்துகளுக்கு ரஜினிகாந்த், “எனது அருமை மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடிஜி, உங்கள் அன்பான வாழ்த்துகளுக்கும், இனிய வார்த்தைகளுக்கும் மிக்க நன்றி,” என்று தெரிவித்துள்ளார்.
“என் பிறந்த நாளுக்கு வாழ்த்துத் தெரிவித்த என்னுடைய அன்பு நண்பர் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் திரு மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி,” என தமிழக முதல்வருக்கும், “என் பிறந்த நாளில் வாழ்த்துத் தெரிவித்த என்னுடைய அருமை நண்பர் திரு கமல்ஹாசன் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றி,” என கமல்ஹாசனுக்கும், நன்றி தெரிவித்துள்ளார்.
பலரும் வாழ்த்து தெரிவித்திருந்தாலும் தமிழக வெற்றிக்கழகத் தலைவரும், நடிகருமான விஜய், ரஜினிகாந்த்திற்கு எந்தவித வாழ்த்தையும் தெரிவிக்கவில்லை. ஆனால், கடந்த வருடம் தெரிவித்திருந்தார்.