கிங்டம் படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | சாய் பல்லவியின் முதல் ஹிந்தி படம் நவ., 7ல் ரிலீஸ் | நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு நிபந்தனை ஜாமின் | பழம்பெரும் தெலுங்கு சினிமா பாடலாசிரியர் சிவசக்தி தத்தா மறைவு: இவர் இசையமைப்பாளர் கீரவாணியின் தந்தை | அடுத்த ஆண்டு ‛ராட்சசன் 2' : விஷ்ணு விஷால் கொடுத்த அப்டேட் | விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் படத்தை வாழ்த்திய ராஷ்மிகா | ஹரிஹர வீரமல்லு படத்தின் தமிழக உரிமை விற்பனை | ராமின் பறந்துபோ படத்தை பாராட்டிய நயன்தாரா | ‛ஆப் ஜெய்சா கோய்' படத்தில் என் கேரக்டர் சவாலானது : மாதவன் | ரஜினி படத்தை இயக்குகிறாரா வினோத் |
பாலியல் குற்றங்களுக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார் பாடகி சின்மயி. அதோடு, மீ டூ விவகாரத்தில் அவர் வெளியிட்ட சில குற்றச்சாட்டுகள் தொடர்ந்து விமர்சனங்களை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில், தனது பேஸ்புக்கில் அவர் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில், 'கடந்த சில ஆண்டுகளாகவே நான் மோசமான விமர்சனங்களை சந்தித்து வருகிறேன். அதனால் அவமானங்கள், துன்புறுத்தல்கள், விபச்சாரி, அட்ஜஸ்ட்மெண்ட் செய்து கொண்டவள் என பல விமர்சனங்களை எதிர் கொண்டேன். அது எல்லாவற்றையுமே கடவுளிடத்திலேயே அர்ப்பணிக்கிறேன். குறிப்பாக தற்போது நான் பெற்று வரும் ஆதரவுகளையும், பாலியல் வன்கொடுமை செய்து வருபவர்களுக்கான ஆதரவுகளையும் கடவுளுக்கு அர்ப்பணிக்கிறேன். கடவுளும், கர்மாவும் வன்கொடுமை செய்பவர்களுக்கும் அவர்களின் ஆதரவாளர்களுக்கும் தக்க பதிலடி கொடுக்கட்டும். இது போன்ற குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டு தப்பி பிழைத்த அனைவரும் இப்போது எனக்கு கிடைக்கும் ஆதரவை பெறட்டும். உண்மை வெல்லட்டும்' என்று அந்த பதிவில் பாடகி சின்மயி தெரிவித்துள்ளார்.