டாக்சிக் படத்தில் இணைந்த ருக்மணி வசந்த் | அர்ஜூன் தாஸிற்கு ஜோடியான ஐஸ்வர்ய லட்சுமி | வடிவேலு - பஹத்பாசிலின் ‛மாரீசன்' ஆகஸ்ட் 22ல் ஓடிடியில் வெளியாகிறது! | இது ஆரம்பம்தான்: கலக்கலான புகைப்படங்களை வெளியிட்ட ஆர்த்தி ரவி! | எனக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது! ஓப்பனாக பேசிய சம்யுக்தா | என்னது, தீபாவளிக்கு இந்த படங்கள் மட்டுமே ரிலீஸா? | ஆக் ஷனுக்கு மாறும் ஹீரோயின்கள் | இந்த வாரம் இரண்டே படம் ரிலீஸ்… | மகா அவதார் நரசிம்மா: பட்ஜெட் 15 கோடி, வசூல் 250 கோடி | சினிமாவில் இருப்பவர்களே சினிமாவை அழிக்கின்றனர்: இயக்குனர் பேரரசு வேதனை |
சீரியல் நடிகை ஸ்ருதி நாராயணனின் ஆபாச வீடியோ சமீபத்தில் இணையத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது குறித்து தற்போது பாடகி சின்மயி தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவு போட்டு உள்ளார். அதில், அந்த வீடியோவை உருவாக்கி பரப்பியவர்கள் ஆண்கள்தான். ஆனால் இப்படிப்பட்ட ஆண்கள்தான் லஞ்சம் கொடுப்பது தவறு அதை ஏற்பது குற்றம் என்று பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த நாட்டில் பணம் இல்லாமல் எதுவுமே நடக்காது. சில பெண்கள் சமரசம் செய்ய மறுத்தால் வாய்ப்புகளை இழக்கிறார்கள். ஒரு பெண் தனக்கான இடத்தில் நிமிர்த்து நிற்க முயற்சித்தால் இந்த சமூகம் அவரை குற்றவாளியாகவே காட்டி விடுகிறது. அதோடு ஒரு பெண்ணை பாலியல் வசதிக்காக துன்புறுத்தும் நபர்களை யாரும் தண்டிப்பதில்லை. இதை செய்பவர்கள் மக்களால் போற்றப்பட்டு வருகிறார்கள்.
இந்த நாட்டிலே பெண்களும், சிறுமிகளும் கடத்தப்பட்டு வியாபார பொருளாக மாற்றப்படுகிறார்கள். அவர்கள் குரல் இன்றி மறைக்கப்படுகிறார்கள். உத்தரபிரதேசத்தில் நடந்த கொடூரமான சம்பவங்களை நினைத்துப் பாருங்கள். இது போன்ற மனப்போக்குடைய ஆண்கள், ஊடகங்கள், திரைப்பட, தொலைக்காட்சி துறையில் இருப்பது கேவலம்.
கலையின் தூய்மை பாதுகாக்கப்பட வேண்டும் என்றால் இவர்கள் எல்லாம் வெளியேற வேண்டும். பெண்களை இதுபோன்று தவறாக நடத்துபவர்கள் தங்களது மனைவியிடம், தாயிடம், சகோதரிகளிடம், மகளிடம் எப்படி நடந்து கொள்வார்கள். இதில் சம்பந்தப்பட்ட டிவி நடிகையின் வீடியோவையும் வெளியிட்டவர்கள் யார்? அதை பரப்பியது யார்? இந்த நாடு முன்னேறிய நாடாக இருந்தாலும் கூட இது போன்ற விஷயங்கள் நடப்பது வேதனை அளிக்கிறது. இந்த தீய சக்திகள் முழுவதுமாக நாசமாக போக வேண்டும், அழிஞ்சு போங்க என்று காட்டமாக பதிவிட்டுள்ளார் பாடகி சின்மயி.