சமந்தாவுக்கு விலை உயர்ந்த திருமண பரிசு கொடுத்த ராஜ் நிடிமொரு | ‛கோழிப்பண்ணை செல்லத்துரை' நாயகனின் அடுத்த படம் ‛ஹைக்கூ' | அஜித்தின் கார் ரேஸை ஆவண படமாக்கும் ஏ.எல்.விஜய் | லண்டன் லெஸ்டர் சதுக்கத்தில் ஷாருக்கான், கஜோலுக்கு சிலை | ரஜினி படத்திற்கு இசையமைக்கும் சாய் அபயன்கர் | ரவி தேஜா,பிரியா பவானி சங்கர் படத்தின் தலைப்பு இருமுடி? | பராசக்தி படத்தின் இசை வெளியீட்டு விழா எங்கே? | அரசன் படத்தின் படப்பிடிப்பு பற்றிய புதிய அப்டேட் | பாலகிருஷ்ணாவின் 'அகண்டா 2' தள்ளிப் போனது ஏன் ? | 100 கோடி வசூல் கடந்த தனுஷின் 'தேரே இஷ்க் மெய்ன்' |

சூர்யா நடிப்பில் ஆர்.ஜே.பாலாஜி இயக்கியுள்ள படம் கருப்பு. திரிஷா நாயகியாக நடித்திருக்கும் இந்த படத்தில் சுவாசிகா, யோகி பாபு, நட்டி நட்ராஜ், ஷிவதா உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்கள். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்க, சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். ஆன்மிகம் கலந்த கதையில் உருவாகி இருக்கும் இந்த படத்தின் காட் மோடு என்ற முதல் பாடல் நேற்று வெளியானது. அந்த லிரிக்கல் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஆர்.ஜே.பாலாஜி கூறுகையில், இந்த படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று சூர்யா ரசிகர்கள் எதிர்பார்த்தார்கள். ஆனால் இறுதி கட்டப்பணிகள் முடிவடையாததால் வெளியிட முடியவில்லை. சீக்கிரமே ஒரு பெரிய நாளில் கருப்பு படம் வெளியாகும். இதில் நானும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறேன் என்று ஒரு அப்டேட் கொடுத்துள்ளார்.




