சமந்தாவுக்கு விலை உயர்ந்த திருமண பரிசு கொடுத்த ராஜ் நிடிமொரு | ‛கோழிப்பண்ணை செல்லத்துரை' நாயகனின் அடுத்த படம் ‛ஹைக்கூ' | அஜித்தின் கார் ரேஸை ஆவண படமாக்கும் ஏ.எல்.விஜய் | லண்டன் லெஸ்டர் சதுக்கத்தில் ஷாருக்கான், கஜோலுக்கு சிலை | ரஜினி படத்திற்கு இசையமைக்கும் சாய் அபயன்கர் | ரவி தேஜா,பிரியா பவானி சங்கர் படத்தின் தலைப்பு இருமுடி? | பராசக்தி படத்தின் இசை வெளியீட்டு விழா எங்கே? | அரசன் படத்தின் படப்பிடிப்பு பற்றிய புதிய அப்டேட் | பாலகிருஷ்ணாவின் 'அகண்டா 2' தள்ளிப் போனது ஏன் ? | 100 கோடி வசூல் கடந்த தனுஷின் 'தேரே இஷ்க் மெய்ன்' |

தமிழ் சினிமாவில் இப்போதைய டாப் 5 ஹீரோயின் அல்லது ரசிகர்கள், சினிமாகாரர்களால் அதிகமாக விருப்பப்படுகிற ஹீரோயின்கள் யார் என்று விசாரித்தால், ருக்மணி வசந்த், கல்யாணி பிரியதர்ஷன், மமிதா பைஜூ, பூஜா ஹெக்டே, ஸ்ரீலீலா என்கிறார்கள்.
தமிழில் ருக்மணி வசந்த் அறிமுகமான படம் ஏஸ். விஜய்சேதுபதி ஹீரோவாக நடித்த அந்த படம் ஓடவில்லை. அடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக மதராஸி படத்தில் நடித்தார். அந்த படமும் அவருக்கு ஸ்டார் அந்தஸ்தை ஏற்படுத்தி கொடுக்கவில்லை. ஆனால், காந்தாரா சாப்டர்1 படத்தில அவர் நடித்த இளவரசி கேரக்டர் தமிழில் மட்டுமல்ல, இந்தியளவில் அவருக்கு தனி இடத்தை உருவாக்கி உள்ளது. 800கோடி வசூலை நெருங்கும் அந்த பட வெற்றியால், தென்னிந்தியாவில் முன்னணி படங்களில் நடிக்க, அவருக்கு வாய்ப்பு வந்து கொண்டு இருக்கிறதாம். இப்போதைக்கு ஜூனியர் என்டிஆர் ஜோடியாக ஒரு படத்தில் நடிக்கிறார். தமிழில் மணிரத்னம் இயக்கத்தில் துருவ் விக்ரம் ஜோடியாக நடிக்கப்போவதாக தகவல்.
மலையாள படமான லோகா படத்தின் வெற்றியின் காரணமாக கல்யாணி பிரியதர்ஷனுக்கும், தமிழில் நிறைய வாய்ப்புகள் வருகிறதாம். இப்போது கார்த்தி ஜோடியாக அவர், ‛வா வாத்தியார்' படத்தில் நடித்து வருகிறார்.
டியூட் படத்தின் வெற்றி மமிதாவுக்கு தனி மார்க்கெட்டை உருவாக்கி உள்ளது. விஜயுடன் ஜனநாயகன், சூர்யாவுடன் கருப்பு, விஷ்ணு விஷாலுடன் இரண்டு வானம் படங்களில் நடித்து வரும் மமிதாவின் மார்க்கெட் மட்டுமல்ல, சம்பளமும் கணிசமாக உயர்ந்துள்ளது.
இவர்களுக்கு அடுத்த இடங்களில் பூஜா ஹெக்டே, ஸ்ரீலீலா ஆகியோர் இருக்கிறார்கள். கூலியில் மோனிகா பாடல், ரெட்ரோவில் கன்னிம்மா பாடல் வெற்றியால் பூஜாவுக்கு கமர்ஷியல் மார்க்கெட்டில் தனி இடம் இருக்கிறதாம்.
தெலுங்கில் முன்னணி ஹீரோயின்களில் ஒருவரான ஸ்ரீலீலா, சிவகார்த்திகேயனின் பராசக்தி மூலமாக தமிழுக்கு வருகிறார்.




