சூர்யாவின் ‛விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' டீசர் வெளியீடு | சிம்புவுக்கு ஜோடியாகும் மமிதா பைஜு | சென்னையில் நாளை ஜனநாயகன் மறு தணிக்கை நடக்கிறது | பவன் கல்யாணை பாராட்டும் ஸ்ரீலீலா | 'மாத்ருபூமி' ஆக மாறிய 'பேட்டில் ஆப் கல்வான்' | முன்பதிவில் 120 கோடி வசூல் கடந்த 'துரந்தர் 2' | கைவசம் பல படங்கள் : வெற்றிக்காக ஏங்கும் ஜெய் | அரசியலுக்கு வருவாரா திரிஷா? | அஜித் இயக்குனர்கள் ரெடி : ஆனா தயாரிப்பாளர் எங்கே | ஆயிரம் நடன கலைஞர்களுடன் உருவான பிரமாண்ட பக்தி பாடல் |

அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான 'புஷ்பா- 2' படத்தில் இடம்பெற்ற 'கிஸ்ஸிக்' என்ற பாடல் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் ஸ்ரீ லீலா. அதன்பிறகு தற்போது சிவகார்த்திகேயன் நடித்து வரும் 'பராசக்தி' படத்தில் நடித்து வருகிறார். அதோடு, தெலுங்கில் தான் நடிக்கும் படங்களில் அதிரடியான பாடல்களுக்கு நடனமாடி வருகிறார் ஸ்ரீலீலா.
இந்த நிலையில் அவர் அளித்த ஒரு பேட்டியில், ''நான் நடிக்கும் படங்களில் மாஸான கெட்டப்பில் அதிரடியான பாடல்களுக்கு நடனமாடி வருகிறேன். என்றாலும் நிஜத்தில் எனக்கு மெலோடி பாடல்கள்தான் மிகவும் பிடிக்கும். அதிலும் உருக்கமான காதல் பாடல்களை ரசித்து கேட்பேன். அந்த வகையில் நான் ஒவ்வொரு நாளும் காலை எழுந்ததுமே பழைய தெலுங்கு படங்களின் பாடல்கள்தான் கேட்டு வருகிறேன். அந்த பாடல்கள்தான் இந்த பரபரப்பாக சூழ்நிலையிலும் என்னை அமைதியாக வைத்துள்ளது'' என்று தெரிவித்துள்ளார் ஸ்ரீ லீலா.