டிரெயின்-ல் ஸ்ருதிஹாசன் பாடிய கன்னக்குழிக்காரா | ரஜினிக்காக மட்டுமே அதை செய்தேன் : சொல்கிறார் உபேந்திரா | மறு தணிக்கைக்கு செல்லும் பராசக்தி | வருட இறுதியில் ஓடிடியில் மகிழ்விக்க வரிசைக்கட்டும் 'புதுப்படங்கள்'..! | குரு சோமசுந்தரம், அனுமோல் இணைந்து நடிக்கும் பாரிஸ் கபே | ஜனநாயகன் படத்தை தெலுங்கில் வெளியிடும் பிரபல நிறுவனம் | ‛ஆசாத் பாரத்' பற்றி நெகிழும் இந்திரா திவாரி | ஜெயிலர் 2 படத்தில் ஷாருக்கான் : உறுதிசெய்த பாலிவுட் நடிகர் | விஜய்யின் வளர்ச்சியை தடுக்க நினைக்கின்றனர் : நடிகை மல்லிகா | இம்மார்ட்டல் படத்தின் டீசர் எப்படி இருக்கு |

அபின் ஹரிஹரன் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் ‛அதர்ஸ்'. இந்த படத்தில் டாக்டராக நடித்துள்ளார் 96 படத்தில் ஜானுவாக நடித்த கவுரி கிஷன். ஹீரோவாக ஆதித்ய மாதவன் நடித்துள்ளார். படம் குறித்து கவுரி கூறுகையில், ‛‛செயற்கை கருத்தரிப்பு, அந்த சிகிச்சை பின்னணியில் கதை உருவாகி உள்ளது. ஹீரோ போலீஸ் ஆகவும், நான் டாக்டராகவும் வருகிறேன். குற்றம் 23 படத்துக்கும், இதற்கும் சம்பந்தம் இல்லை. அது வேறு கதை, இது வேறு. தமிழ் உள்ளிட்ட மொழிகளில் பல படங்களில் நான் நடித்து இருந்தாலும் 96 பட ஜானுவை மக்கள் இன்னும் மறக்கவில்லை, இன்றும் கொண்டாடுகிறார்கள். அந்த கேரக்டரை விட நல்ல கேரக்டரில் நடிக்க ஆசைப்படுகிறேன். அது பேராசை தான்'' என்றார்.