ரஜினியின் 'ஜெயிலர்-2' ரிலீஸ் ஜூனிலிருந்து ஆகஸ்ட்டுக்கு மாறுகிறது! | சென்னையில் சீர்காழி கோவிந்தராஜன் பெயரில் சாலை | எம்ஜிஆரின் 'இதயக்கனி' படத்தை பார்த்த எடப்பாடி பழனிசாமி | ராஜமவுலி படத்தை அடுத்து சந்தீப் ரெட்டி வங்கா படத்தில் நடிக்கும் மகேஷ் பாபு! | திருமணத்திற்கு 10 நாளே இருக்கும் நிலையில் ஹிந்தி படத்திலிருந்து வெளியேறிய ராஷ்மிகா! | ரொமாண்டிக் பேண்டசி படமாக உருவாகும் 'டபுள் ஆக்குபன்சி' | காளை அடக்குபவராக விமல் நடிக்கும் 'வடம்' | இசை அமைப்பாளரை மணந்தார் ரோஷினி | பிளாஷ்பேக் : பாக்யராஜை இயக்கிய பாலகுமாரன் | பிளாஷ்பேக்: தமிழில் குழந்தை நட்சத்திரமாக நடித்த பாலிவுட் நடிகை |

நடிகை கவுரி கிஷன் விவகாரம் தான் கடந்த சில நாட்களாக கோலிவுட்டில் ஹாட் டாபிக். அவர் உடல் எடை குறித்து யூடியுப்பர் ஒருவர் தவறான கேள்வி கேட்க அதற்கு கவுரி பதிலடி கொடுக்க அந்த விவகாரம் வைரல் ஆனது. யூடியூப்பர் வருத்தம் தெரிவித்தாலும் கவுரி அதை ஏற்கவில்லை. கவுரிக்கு ஆதரவாக பல்வேறு தரப்பினர் குரல் கொடுத்தனர்.
கவுரி நடித்த 'அதர்ஸ்' படம் கடந்த வாரம் வெளியான நிலையில் வரவேற்பை பெறவில்லை. இன்னும் சொல்லப் போனால் தோல்வி அடைந்துள்ளது. படம் குறித்தும் அந்த படத்தில் சொல்லப்பட்ட திருநங்கைகள் திருநம்பிகள் ஆதரவான கரு குறித்தும் யாரும் பேசவில்லை. படத்தின் ஹீரோ ஆதித்யா மாதவன் குடும்பத்தினரே படத்தை தயாரித்து இருப்பதாக தகவல். அவர்களுக்கு அதர்ஸ் படம் சில கோடி இழப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த வாரம் வந்த படங்களில் கிஷன் தாஸ் நடித்த 'ஆரோமலே' படத்துக்கு மட்டும் ஏ சென்டர்களில் ஓரளவு வரவேற்பு கிடைத்துள்ளது. ஆனாலும் படம் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை கடந்த வாரம் வெளியான மற்ற சின்ன சின்ன படங்கள் படுதோல்வி அடைந்துள்ளன.




