சண்டை கலைஞர்கள், கராத்தே மாஸ்டருக்கு நன்றி கூறிய நடிகை அபிராமி | முதல்வரை சந்திக்கும் சினிமாதுறையினர் கோரிக்கைகள் நிறைவேற்றப்படுமா? | தனுசை விட 100 மடங்கு சிறப்பாக நடித்து இருக்கும் கஸ்துாரிராஜா: மிஷ்கின் புகழாரம் | 20 கோடி கடன் வரவில்லை.. யாரும் போன் எடுக்கலை..: கே. ராஜன் பற்றி அவர் குடும்பத்தினர் | ஹாலிவுட் பாணியில் 'டாக்ஸிக்' படத்தின் விநியோக முறையை பின்பற்றும் யஷ்! | ஒரே நேரத்தில் மூன்று படங்களில் நடித்து வரும் பிரபாஸ்! | கிரிக்கெட் வீரர் திலக் வர்மாவுடன் காதலா? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த ஸ்ரீலீலா! | இயக்குனர் கஸ்தூரிராஜா முக்கிய வேடத்தில் நடித்துள்ள 'ஹபீபி' மே 28 ல் ரிலீஸ் | நாகரிகமற்ற கேள்விகள்: கோபமடைந்த மாளவிகா மோகனன் | பிளாஷ்பேக்: எம் ஜி ஆரை முதன்முதலாக பார்த்து, வியந்து நின்ற சாண்டோ எம் எம் ஏ சின்னப்பதேவர் |
மக்கள் திலகம் எம்ஜிஆர் நடிப்பில் 1975ம் ஆண்டு வெளிவந்த படம் 'இதயக்கனி'. நாயகியாக ராதா சலுஜா நடிக்க, முக்கிய வேடங்களில் வி.கோபாலகிருஷ்ணன், எஸ்வி ராமதாஸ், வெண்ணிறாடை நிர்மலா, ராஜ சுலோச்சனா பண்டரிபாய் உட்பட பலர் நடித்திருந்தனர். ஏ ஜெகநாதன் இயக்கினார். சத்யா மூவிஸ் சார்பில் ஆர்.எம். வீரப்பன் தயாரித்திருந்தார். எம்எஸ் விஸ்வநாதன் இசை அமைத்திருந்தார்.



மிகப்பெரிய எஸ்டேட் தொழிலதிபரான எம்ஜிஆர் தனது எஸ்டேட்டில் சமத்துவ சமுதாயத்தை உருவாக்குகிறார். ஒரு ஏழைப் பெண்ணை காதலித்து திருமணம் செய்கிறார். ஆனால் அந்த பெண்ணுக்கு ஒரு கொலையில் தொடர்பு இருப்பதாக தகவல் கிடைக்கிறது. போலீஸ் அதிகாரியான எம்ஜிஆர் அதனை கண்டுபிடித்து உண்மையான குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தருவது படத்தின் கதை.
இந்த படம் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் தயாராகி கடந்தாண்டு வெளியானது. ரீ ரிலீஸில் 200 நாட்களை கடந்து ஓடிக் கொண்டிருக்கிறது. சென்னையில் ஆல்பர்ட் தியேட்டரில் இப்படம் இன்னமும் ஓடுகிறது. இந்த படத்தை இன்று(பிப்., 17) அதிமுக., பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் முன்னாள் அமைச்சர்கள் சிலரும் ரசித்து பார்த்துள்ளார். எம்ஜிஆர் வரும் பல காட்சிகளில் தன்னையும் அறியாமல் கண்கலங்கினார் இபிஎஸ். இதுதொடர்பான வீடியோக்கள் வெளியாகி உள்ளன.