கோவாவில் செட்டில் ஆகிறாரா ரவிமோகன் | 'எல்ஐகே' படத்தால் மாறிய 'காளிதாஸ் 2, லீடர்' வெளியீடுகள் | தாய்லாந்து தீவில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா ஹனிமூன் | பிரசாந்த் நடிக்க வேண்டிய 'பூவே உனக்காக' : தேடிப் போன விஜய் அப்பா…! | 'பெத்தி' படப்பிடிப்பில் ராம்சரணுக்கு கண்ணில் காயம் பட்டதா ? படக்குழுவினர் விளக்கம் | அஜித் 64 அறிவிப்புக்காக காத்திருக்கும் ரசிகர்கள் | 26வது பிறந்தநாளை தந்தையுடன் கொண்டாடிய திலீப் மகள் ; தாயுடன் பத்து வருடமாக பாராமுகம் | போலி 'ஏஐ' வீடியோக்கள் : 'துரந்தர்' இயக்குனர் ஆதித்ய தர் எச்சரிக்கை | இனி இந்த ஜானரில் படங்களை இயக்கப் போவதில்லை ; இயக்குனர் பிரியதர்ஷன் முடிவு | உஸ்தாத் பகத்சிங் : ரூ.100 கோடி மேல் நஷ்டம் வருமா? |

தனிப்பட்ட முறையில் நட்பாக இருந்தாலும் எம்ஜிஆரும், சிவாஜியும் சினிமாவில் எதிரெதிர் துருவங்களாக இருந்தார்கள். எம்ஜிஆர் படத்ததிற்கென்று தனி தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் இருந்தார்கள். அதில் முக்கியமானது எம்ஜிஆர் படங்களை தயாரித்த ஆர்.எம்.வீரப்பனின் சத்யா மூவீஸ் நிறுவனம்.
எம்ஜிஆரின் மறைவிற்கு பிறகு சத்யா மூவீஸ் சிவாஜியை வைத்து தயாரித்த படம் 'புதிய வானம்'. இந்த படத்தை ஆர்.வி.உதயகுமார் இயக்கினார். அவரே பாடல்களையும் எழுதினார். படத்தில் சிவாஜி பாடுவதாக ஒரு பாடலை எழுதிய உதயகுமார் அதை ஆர்.எம்.வீரப்பனிடம் காட்டினார். அதை படித்து பார்த்த வீரப்பன் அதிர்ச்சி அடைந்தார் அந்த பாடலில் “எளிமையும், பொறுமையும் உன்னை புரட்சித் தலைவனாக்கும்” என்று எழுதப்பட்டிருந்தது. இந்த வரிகளை சிவாஜி ஒப்புக் கொள்வாரா? எதற்கும் அவரிடம் காட்டி ஒப்புதல் பெற்று விடுங்கள் என்று கூறிவிட்டார் வீரப்பன்.
அதன்படியே சிவாஜியை சந்தித்து பாடல் வரிகளை படித்து காட்டினார், ஆர்.வி.உதயகுமார். ஒருவேளை சிவாஜி இந்தப் பாடல் வரிகளை விரும்பாவிட்டால், அதற்கு மாற்றாக வேறு பாடல் வரிகளையும் தயாராக வைத்திருந்தார்.
பாடலை சிவாஜியிடம் பாடிக் காட்டினார். எம்ஜிஆர் பற்றிய வரிகள் வரும்போது சிவாஜி முகத்தில் எவ்வித மாற்றமும் இல்லை. பாடல் முழுவதும் முடிந்ததும், 'புரட்சித் தலைவனாக்கும் உன்னை” என்று எழுதியிருக்கிறாயே, அப்படி எழுதும்படி வீரப்பன் சொன்னாரா?' என்று கேட்டார். 'இல்லை. நானாகத்தான் எழுதினேன் அவர் தங்களிடம் ஒப்புதல் பெறச் சொன்னார்' என்று உதயகுமார் கூறினார். 'இந்தப் பாடலை நான் பாடவேண்டும். அவ்வளவுதானே? தாராளமாகப் பாடுகிறேன். அண்ணன் மறைந்து விட்டார். அவர் புகழைப் பாடுவதற்குக் கொடுத்து வைத்திருக்க வேண்டும்' என்று சிவாஜி கூறினார்.
அந்தப்பாடல் காட்சி படப்பிடிப்பின்போது, எம்.ஜி.ஆர் ஸ்டைலில் விரலைக் காட்டி நடிக்க வேண்டும் என்றார் ஆர்.வி.உதயகுமார். அதேபோல நடித்தார் சிவாஜி.




