ஜான்வி கபூர் : கிளாமர் வாய்ப்புகளை மட்டுமே தரும் தெலுங்கு சினிமா | மக்கள் மேடை : தனி இயக்கம் துவக்கினார் ரஜினி மனைவி லதா | 60 வயதில் மூன்றாவது திருமணம் : அமீர்கானை விமர்சிக்கும் ரசிகர்கள் | காஜல் அகர்வால் நடிக்கும் 'தி இந்தியா ஸ்டோரி' ஜூலை 24ம் தேதி வெளியாகிறது! | மீண்டும் வெப் சீரிஸில் நடிக்கும் நாகசைதன்யா | ஜனநாயகன் : வினியோகஸ்தர்களுக்கு பணம் திருப்பித் தரப்படுகிறதா? | கருப்பு - தமிழக வசூல் 175 கோடி, அதிகாரப்பூர்வ அறிவிப்பு | பெத்தி : முதல் நாள் வசூல் ரூ.135 கோடி | 8 வருடங்களுக்கு பிறகு நாயகியாக திரும்பி வரும் ஆஸ்னா ஜவேரி | மறுபிரவேசம் தொடங்கி விட்டது : ஈடன் மகிழ்ச்சி |

தமிழ் சினிமாவின் முக்கியமான எடிட்டராக கருதப்படுகிறவர் பி.லெனின். நதியை தேடி வந்த கடல், பண்ணையபுரத்து பாண்டவர்கள், சொல்ல துடிக்குது மனசு, ஊருக்கு 100 பேர், உள்ளிட்ட சில படங்களை இயக்கினார். எந்த படமும் வணிக ரீதியாக வெற்றி பெறவில்லை.
அவர் இயக்கிய முக்கியமான படம் 'எத்தனை கோணம் எத்தனை பார்வை', ஜெயகாந்தன் எழுதிய நாவலை அதே பெயரில் படமாக இயக்கினார். இதில் தியாகராஜன், ஸ்ரீப்ரியா, சுரேஷ், நளினி நடித்தார்கள். இளையராஜா இசை அமைத்தார். பி.கண்ணன் ஒளிப்பதிவு செய்தார். இரண்டு முரண்பட்ட காதல்களை சொன்ன படம்.
படத்தின் பிரிவியூ காட்சி பார்த்த திரையுலக பிரமுகர்கள் படத்தை பாராட்டி தள்ளினார்கள். ஆனால் படம் கடைசி வரை வெளிவரவில்லை. இந்த படத்தை தயாரித்த வி.எம்.மூவீஸ் என்ற நிறுவனம் கடும் நிதி நெருக்கடிக்கு ஆளானதால் படம் வெளிவரவில்லை என்றார்கள். பி.லெனினின் முந்தைய படங்கள் அனைத்தும் தோல்வி அடைந்ததால் நிதி உதவி செய்து யாரும் படத்தை வெளியிடவும் முன்வரவில்லை.




