தோழிகளுடன் பால் விளையாடி கையை முறித்துக் கொண்ட யாஷிகா | பேஷஸ் ஆப் கர- தனுஷின் கர படத்தின் முன்னோட்ட வீடியோ வெளியீடு | வட அமெரிக்காவில் கல்கி 2898 ஏடி படத்தின் வசூல் சாதனையை முறியடித்த துரந்தர் 2 | அண்ணன் வாரிசுகளின் பட பூஜைக்கு வந்து வாழ்த்திய பவன் கல்யாண் | முன்னணி இயக்குனர்களின் வாட்ஸ் ஆப் குழு ‛ரெய்னா' : அர்த்தம் தெரியுமா? | இது எனக்கு புது உலகம் : முதல்முறையாக வெப்சீரிஸில் நடிக்கும் சம்யுக்தா | சிவகார்த்திகேயனின் தங்கையாக நடிக்கும் மாளவிகா மனோஜ் | சினிமாக்காரர்களுக்கு ஞாயிறு கட்டாயம் விடுமுறை வேண்டும் : நிவின்பாலி வலியுறுத்தல் | சிபிஐ 6ம் பாகம் வருகிறது : இயக்குனர் மது தகவல் | தேர்தல் பிரச்சாரத்துக்கு செல்வாரா வடிவேலு |

விஜய், பூஜா ஹெக்டே, மமிதா பைஜு மற்றும் பலர் நடிப்பில் வினோத் இயக்கியுள்ள படம் 'ஜனநாயகன்'. ஜனவரி 9ம் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்ட படம், தணிக்கை சான்றிதழ் விவகாரத்தால் வெளியீடு தள்ளிப் போனது.
இரு தினங்களுக்கு முன்பு இப்படத்தின் தணிக்கை முடிவடைந்ததாக செய்திகள் வெளிவந்தன. இருந்தாலும், தேர்தல் ஆணையத்திடம் முடிவு குறித்து பரிந்துரைத்துள்ளதாகச் சொல்கிறார்கள். இப்படத்தின் அரசியல் சம்பந்தப்பட்ட காட்சிகள் இருப்பதாலும், தமிழக சட்டசபைத் தேர்தல் நடக்க உள்ளதாலும் அவர்கள்தான் முடிவு எடுக்க வேண்டுமாம்.
தற்போது தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன. விஜய் அரசியல் கட்சித் தலைவர் என்பதால் இந்தப் படம் தற்போது வெளிவந்தால் அவரது பிரசாரத்திற்கும் பேருதவியாக இருக்கும்.
ஏப்ரல் 23ம் தேதி தமிழக சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. மே 4ம் தேதி முடிவுகள் வெளியாக உள்ளன. எனவே, மே 4ம் தேதிக்குப் பிறகே படம் வெளியாகலாம் என சிலர் சொல்கிறார்கள். இருந்தாலும் ஜுன் 22ம் தேதி விஜய் பிறந்தநாள் வருகிறது. அதை முன்னிட்டு அந்த சமயத்தில் படத்தை வெளியிடவும் வாய்ப்புள்ளது.
அடுத்த வாரத்தில் இப்படத்தின் வெளியீடு குறித்த உறுதியான தகவல் வெளியாகலாம்.