சிக்கந்தர் தோல்விக்கு காரணம் முருகதாஸா ? சல்மான் கானா ? ; ராஷ்மிகா பதில் | 'சர்வம் மாயா' இயக்குனரின் அடுத்த படத்திலும் இணையும் நிவின்பாலி | வந்தே மாதரம் பாடலை பாட ஏ.ஆர் ரஹ்மான் மறுத்தாரா ? சின்மயி பதில் | மோகன்லால் படத்தை இயக்கும் பஹத் பாசிலின் ஆஸ்தான இயக்குனர் | நடிகரை அறைந்தாரா பூஜா ஹெக்டே? தீயாக பரவும் செய்தி | ஏப்ரல் 30ல் திரைக்கு வரும் தனுஷின் 'கர'? | ஓடிடியில் ஹிந்தியில் மட்டுமே வெளியான 'பாகுபலி தி எபிக்' | 'பார்டர்-2' படத்துடன் வெளியாகும் துரந்தர் -2 படத்தின் டீசர்! | ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஆதரவாக குரல் கொடுத்த மெஹபூபா முப்தி! | மீண்டும் தெலுங்கு படத்தில் நடிக்கும் பிரிகிடா சகா! |

கவுதம் மேனனிடம் துணை இயக்குநராக பணிபுரிந்து வந்த சரங் தியாகு இயக்கி உள்ள படம் 'ஆரோமலே'. இப்படத்தில் கிஷன் தாஸ், ஷிவாத்மிகா, ஹர்ஷத் கான், விடிவி கணேஷ் நடித்திருந்தனர். மினி ஸ்டுடியோஸ் தயாரித்துள்ளது. சித்து குமார் இசையமைத்துள்ளார். கடந்த 7ம் தேதி படம் வெளியானது.
இந்த படத்தில் கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு, திரிஷா நடித்த 'விண்ணைத்தாண்டி வருவாயா' படத்தில் இடம்பெற்றிருந்த பாடல்கள் பயன்படுத்தப்பட்டிருந்தது. 'ஆரோமலே' என்ற டைட்டில்கூட 'விண்ணைத்தாண்டி வருவாயா' பட பாடலின் வரிதான்.
இந்த நிலையில், 'ஆரோமலே' படத்தில் 'விண்ணைத்தாண்டி வருவாயா' படத்தில் இடம் பெற்றிருந்த பாடலை பயன்படுத்தியதாக அந்த படத்தை தயாரித்த ஆர்.எஸ்.இன்போடெய்ன்மெண்ட் நிறுவனம் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் 'விண்ணைத்தாண்டி வருவாயா' படத்தின் இசை மற்றும் காட்சிகளை பயன்படுத்த இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.




