எனக்கு பாராட்டு விழா வேணாம்: தயாரிப்பாளர் தாணு | வீட்டை வைத்து கடன் வாங்கி படம் தயாரித்ததுஏன்? ஆண்ட்ரியா | 'வாழு, வாழ விடுங்கள்': கிண்டல், கேலிகளுக்கு கீர்த்தி சுரேஷ் பதில் | அஜித் அடுத்த பட அறிவிப்பு - தொடரும் தாமதம் | மீண்டும் தெலுங்கு இயக்குனர் படத்தில் சூர்யா ? | 'மாஸ்க்': வாய்ப்பில்லாத ஆண்ட்ரியாவுக்கு வாய்ப்புகள் வருமா? | 50 வருட திரையுலக பயணத்தில் இருந்து ஓய்வு பெறும் நடிகை துளசி | 'மெமரிஸ்' இரண்டாம் பாகம் ; பிரித்விராஜ் விருப்பம் | பட விளம்பர மோசடி ; பெண் உள்ளிட்ட ஐவர் மீது நடிகர் யஷ்ஷின் தாயார் போலீசில் புகார் | இரண்டு நாளில் ஒரு மில்லியன் பார்வைகளைத் தொட்ட மஞ்சு வாரியரின் குறும்படம் |

அறிவழகன், 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' ஹேமா, வேல. ராமமூர்த்தி நடிக்க, கமல் ஜி இயக்கியுள்ள படம் 'நெல்லை பாய்ஸ்'. ரசாந்த் அர்வின் இசையமைத்துள்ளார். இந்த பட விழாவில் 40 ஆண்டுகளுக்கு மேல் சினிமாதுறையில் சாதனைகள் படைத்து வரும் தயாரிப்பாளர் எஸ்.தாணுவுக்கு பாராட்டு விழா நடத்தப்பட வேண்டும் என பலர் பேசினர்.
அதற்கு பதில் அளித்து பேசிய தாணு, "இன்றைய திரை உலகுக்கு மிகவும் அவசியம் ஒரு கட்டுப்பாடு. எனக்குப் பாராட்டு விழா பிடிக்காது. ரஜினிகாந்த் நடிப்பில் 50 ஆண்டுகள் முடித்துள்ளார். அவர் செய்த சாதனைகள் எண்ணற்றவை. அவரே தனக்குப் பாராட்டு விழா வேண்டாம் என்று கூறிவிட்டார். அவரே அப்படிச் சொன்னபோது, எனக்கு மட்டும் பாராட்டு விழாவா? எனக்கு அது தேவையில்லை. நாம் மக்களின் நன்மைக்காக, சமூகத்திற்காக விழா எடுக்கலாம்" என்றார்.
படத்தின் இயக்குனர் கமல் ஜி பேசுகையில் "இந்த படம் முழுக்க முழுக்க நகரம் சார்ந்த நட்பைப் பற்றிப் பேசுகிறது. நட்பு மற்றும் காதலை அடிப்படையாக வைத்து இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது. நகரத்து நட்புக்கும் நெல்லை மாதிரியான பகுதியின் நட்புக்கும் என்ன மாதிரியான வேறுபாடு இருக்கிறது என்பதைப் பற்றிப் பேசுகிறது. ஹீரோ அறிவழகன் சிறப்பாக நடித்துள்ளார். நாயகி ஹேமா விடியற்காலை 5 மணி வரைக்கும் நடித்துக் கொடுத்து ஒத்துழைப்பு கொடுத்தார்" என்றார்.