பாலிவுட்டில் கவனம் செலுத்தும் ராஷி கண்ணா | பவிஷின் ‛லவ் ஓ லவ்' முதல்பார்வை வெளியீடு | ஒரே வாரத்தில் ஆயிரம் கோடி வசூல் செய்த துரந்தர் 2 | நேரடி ஓடிடி ரிலீஸ் : விஜய் சேதுபதி நடிக்கும் காட்டான் முதல் வரிசை கட்டும் புதுவரவுகள் | ஐஸ்வர்யா ராய் பார்த்து நடிக்க ஆசைப்பட்டேன்: அபிநயா | கோவாவில் செட்டில் ஆகிறாரா ரவிமோகன் | 'எல்ஐகே' படத்தால் மாறிய 'காளிதாஸ் 2, லீடர்' வெளியீடுகள் | தாய்லாந்து தீவில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா ஹனிமூன் | பிரசாந்த் நடிக்க வேண்டிய 'பூவே உனக்காக' : தேடிப் போன விஜய் அப்பா…! | 'பெத்தி' படப்பிடிப்பில் ராம்சரணுக்கு கண்ணில் காயம் பட்டதா ? படக்குழுவினர் விளக்கம் |

வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சிம்பு புதிய படத்தில் இணைந்துள்ளது அனைவரும் அறிந்ததே. அது வடசென்னை படத்தின் தொடர்ச்சி என பலரும் கூறிவந்த நிலையில், இத்திரைப்படம் வட சென்னையில் நடைபெறும் கதைகளத்தை மையப்படுத்தி உருவானாலும், ‛வட சென்னை 2' இல்லை என வெற்றிமாறன் கூறியுள்ளார். சிம்புவின் 49வது படமாக உருவாகும் இப்படத்தை தாணு தயாரிக்கிறார்.
சமீபத்தில் இந்த படத்தின் புரோமோ ஷூட் நடைபெற்றது. இந்த நிலையில் இப்படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை புரோமோ உடன் அறிவித்துள்ளார் தயாரிப்பாளர் தாணு. ‛வட சென்னை' படத்தை போன்று அதே காலகட்டத்தில் நடக்கும் மற்றொரு கதையாக இது உருவாகியுள்ளது, புரோமோவில் தெரிகிறது. கையில் கத்தியுடன் சிம்பு நடந்து செல்லும் காட்சிகளுடன் கூடிய புரோமோவில் படத்திற்கான அப்டேட் விரைவில் என அறிவித்துள்ளனர்.
'வடசென்னை' படத்தில் முதலில் சிம்பு தான் நடிப்பதாக இருந்தது. ஆனால் சில காரணங்களால் அவரால் நடிக்க முடியாமல் போய்விட்டது. இதனையடுத்து அவருக்கு பதிலாக தனுஷ் நடித்தார். இந்நிலையில் தற்போது வடசென்னை பின்னணியிலான மற்றொரு கதையில் சிம்பு - வெற்றிமாறன் இணைந்திருப்பது படம் பற்றிய எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.