இப்ப, தமிழ் சினிமாவில் டாப் 5 ஹீரோயின் யார் தெரியுமா? | சூர்யாவின் ‛கருப்பு' ரிலீஸ் எப்போது? | ராஷ்மிகாவின் ‛மைசா' படத்தில் இணையும் புஷ்பா 2 வில்லன் | பராசக்தி படப்பிடிப்பு முடிவடைந்தது | நவம்பர் 21-ல் ரீரிலீஸ் ஆகும் ப்ரண்ட்ஸ் | லாபத்தில் முதலில் நுழைந்த 'பைசன்' | தீபாவளிக்கு ஜனநாயகன் அப்டேட் ஏனில்லை | பொங்கலுக்கு நடிகர் சங்க கட்டடம் திறப்பு : விஷால் திருமணம் எப்போது | பிக்பாஸில் வந்து விட்டால் மட்டும் நடிகையாகி விட முடியாது: தர்ஷிகா | ஹீரோயின் ஆனார் 'அரண்மனை' ஹர்ஷா |
ஹிந்தியில் ஆயுஷ்மான் குரானாவுடன் ராஷ்மிகா மந்தனா இணைந்து நடித்திருக்கும் தம்மா படம் தீபாவளிக்கு திரைக்கு வந்துள்ள நிலையில், அடுத்தபடியாக தெலுங்கில் அவர் நடித்திருக்கும் ‛தி கேர்ள் ப்ரெண்ட்' என்ற படம் நவம்பர் 14ம் தேதி திரைக்கு வருகிறது. இந்த நிலையில் தற்போது மைசா என்ற படத்தில் கதையின் நாயகியாக நடிக்கிறார். இந்த படத்தின் போஸ்டர் தீபாவளிக்கு வெளியிடப்பட்டுள்ளது. ரவீந்திர புல்லே என்பவர் இயக்குகிறார். இதில் வில்லனாக தாரக் பொன்னப்பா விரைவில் இணையப் போகிறார். இவர் ஏற்கனவே அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்த புஷ்பா- 2 படத்தில் வில்லனாக நடித்திருந்தார். அதோடு, கேஜிஎப், தேவரா போன்ற படங்களிலும் வில்லனாக நடித்துள்ளார். தெலுங்கு, ஹிந்தி, தமிழ், கன்னடம், மலையாளம் என ஐந்து மொழிகளில் வெளியாகும் இப்படம் வருகிற டிசம்பர் 1ஆம் தேதி திரைக்கு வருகிறது.