பவழ மல்லி Vs முட்டை கலக்கி - 'யூத்'களுக்குள் கடும் போட்டி | தோழிகளுடன் பால் விளையாடி கையை முறித்துக் கொண்ட யாஷிகா | பேஷஸ் ஆப் கர- தனுஷின் கர படத்தின் முன்னோட்ட வீடியோ வெளியீடு | வட அமெரிக்காவில் கல்கி 2898 ஏடி படத்தின் வசூல் சாதனையை முறியடித்த துரந்தர் 2 | அண்ணன் வாரிசுகளின் பட பூஜைக்கு வந்து வாழ்த்திய பவன் கல்யாண் | முன்னணி இயக்குனர்களின் வாட்ஸ் ஆப் குழு ‛ரெய்னா' : அர்த்தம் தெரியுமா? | இது எனக்கு புது உலகம் : முதல்முறையாக வெப்சீரிஸில் நடிக்கும் சம்யுக்தா | சிவகார்த்திகேயனின் தங்கையாக நடிக்கும் மாளவிகா மனோஜ் | சினிமாக்காரர்களுக்கு ஞாயிறு கட்டாயம் விடுமுறை வேண்டும் : நிவின்பாலி வலியுறுத்தல் | சிபிஐ 6ம் பாகம் வருகிறது : இயக்குனர் மது தகவல் |

கடந்த ஏப்ரல் மாதம் மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான படம் தொடரும். தருண் மூர்த்தி இயக்கிய இப்படத்தில் கதாநாயகியாக ஷோபனா நடித்திருந்தார். குடும்ப கதை அம்சத்துடன் ஆக் ஷன் பின்னணி கலந்து உருவான இந்த படம் 230 கோடி வசூலித்து மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. இதனை தொடர்ந்து மோகன்லாலும் இயக்குனர் தருண் மூர்த்தியும் மீண்டும் ஒரு படத்தில் இணைகிறார்கள் என்று சில மாதங்களாகவே பேசப்பட்டு வந்தது. இந்த நிலையில் மீண்டும் தருண் மூர்த்தி டைரக்ஷனில் மோகன்லால் நடிக்கிறார் என்கிற அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.
தள்ளுமால, அஞ்சாம் பாதிரா உள்ளிட்ட பல வெற்றி படங்களை தயாரித்த ஆசிக் உஸ்மான் புரடக்சன்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. இயக்குனர் தருண் மூர்த்தி தற்போது பிரேமலு பட நாயகன் நஸ்லேனை வைத்து டார்பிட்டோ என்கிற படத்தை இயக்கி முடித்துவிட்டு, அடுத்ததாக பிரித்விராஜ் நடிப்பில் ஆபரேஷன் கம்போடியா என்கிற படத்தை இயக்கி வருகிறார். இந்த இரண்டு படங்களின் வேலைகளும் முடிவடைந்த பிறகு மோகன்லால் படத்தை இயக்குவார் என தெரிகிறது.