நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி ஆதாரங்களை சமர்ப்பித்த நிவின்பாலி | இந்த ஆண்டு 3வது யானை படம் | குறும்புக்கார குழந்தை : விநாயகனை நெகிழ வைத்த மம்முட்டி | ரிலீசுக்கு முன்பே 350 கோடி முன் வியாபாரத்தை முடித்த 'திரிஷ்யம் 3' | பாலிவுட் படப்பிடிப்பில் உட்காருவதற்கு நாற்காலி கூட கிடைக்காது; துல்கர் சல்மான் பகீர் தகவல் | 'திரிஷ்யம் 3' படப்பிடிப்பை நிறைவு செய்த மோகன்லால் | ரியோ என பெயரை மாற்றிய நடிகர் ரியோ ராஜ்! | 5 ஆண்டுகளாக கதை குறித்த ஆலோசனையில் ஈடுபட்டு வரும் கீர்த்தி சுரேஷ்! | மலேசியா முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்த அஜித்குமார்! | தனுசை ஆச்சரியப்பட வைத்த இயக்குனர் விக்னேஷ் ராஜா! |

மலையாள இளம் முன்னணி நடிகர் நிவின்பாலியை வைத்து கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு வெளியான 'மகாவீர்யர்' என்கிற படத்தை தயாரித்த தயாரிப்பாளர் ஷாம்னாஸ் என்பவர், நிவின்பாலி மற்றும் மகாவீர்யர் பட இயக்குனர் அப்ரிட் ஷைன் இருவரும் தன்னிடம் 1.9 கோடி ரூபாய் மோசடி செய்து விட்டதாக போலீசில் புகார் அளித்துள்ளார்.
'1983, ஆக்சன் ஹீரோ பைஜூ' படங்களை தொடர்ந்து நிவின்பாலி, இயக்குனர் அப்ரிட் ஷைன் கூட்டணி மகாவீர்யர் படத்தில் இணைந்தனர். இந்த படம் தோல்வி படமாக அமைந்தது. இந்த படத்தில் நிவின்பாலியும் ஒரு தயாரிப்பாளராக இருந்ததால் ஷாம்னாஸுக்கு நஷ்ட ஈடு இழப்பாக 95 லட்சம் தருவதாகவும் அடுத்து தானும் இயக்குனர் அப்ரிட் ஷைனும் இணைந்து உருவாக்கும் 'ஆக்சன் ஹீரோ பைஜூ' படத்தின் இரண்டாம் பாகத்தில் அவரையும் ஒரு தயாரிப்பாளராக இணைத்துக் கொள்வதாகவும் உறுதி அளித்திருந்தார்.
அதை நம்பி அந்த இரண்டாம் பாகத்திற்கு 1.9 கோடி வரை பணத்தை செலவு செய்தாராம் ஷாம்னாஸ். அதுவரை நிவின்பாலியின் தயாரிப்பு நிறுவனமிடம் இருந்த அனைத்து பணிகளையும் தனது தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் மேற்கொண்டு வந்தார். ஆனால் அதன்பின்னர் தான் அதற்கு முந்தைய ஒப்பந்தத்தின் படியே இந்த இரண்டாம் பாகத்திற்கான வெளிநாட்டு உரிமையை ஒருவரிடம் 5 கோடி விலை பேசி இரண்டு கோடி ரூபாய் முன்பணமும் வாங்கிவிட்டதாக ஷாம்னாஸுக்கு தெரிய வந்தது. இதனை தொடர்ந்து தான் அவர்கள் மீது புகார் அளித்துள்ளார் தயாரிப்பாளர் ஷாம்னாஸ்.
அதேசமயம் நிவின்பாலியும் தயாரிப்பாளர் ஷாம்னாஸ் மீது 'ஆக்சன் ஹீரோ பிஜூ 2' படத்தின் டைட்டிலை தன் வசம் வைத்துக் கொள்வதற்காக போலி கையெழுத்து மூலமாக முறைகேடாக செயல்பட்டுள்ளார் என்று அவர் மீது வழக்கு தொடர்ந்தார். இதனால் நீதிமன்றம் அவரை ஆதாரங்களுடன் நேரில் ஆஜராகும்படி சம்மன் அனுப்பியிருந்தது. இதனைத் தொடர்ந்து வைக்கம் முதன்மை நீதிமன்றத்தில் நேற்று மாலை நேரில் ஆஜரான நிவின்பாலி தன்னிடம் இருந்த ஆதாரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார்.




