குறும்புக்கார குழந்தை : விநாயகனை நெகிழ வைத்த மம்முட்டி | ரிலீசுக்கு முன்பே 350 கோடி முன் வியாபாரத்தை முடித்த 'திரிஷ்யம் 3' | பாலிவுட் படப்பிடிப்பில் உட்காருவதற்கு நாற்காலி கூட கிடைக்காது; துல்கர் சல்மான் பகீர் தகவல் | 'திரிஷ்யம் 3' படப்பிடிப்பை நிறைவு செய்த மோகன்லால் | ரியோ என பெயரை மாற்றிய நடிகர் ரியோ ராஜ்! | 5 ஆண்டுகளாக கதை குறித்த ஆலோசனையில் ஈடுபட்டு வரும் கீர்த்தி சுரேஷ்! | மலேசியா முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்த அஜித்குமார்! | தனுசை ஆச்சரியப்பட வைத்த இயக்குனர் விக்னேஷ் ராஜா! | 96 பட இயக்குனரிடம் கதை கேட்ட நானி | லிங்குசாமி, சரண் புதிய படத்திற்காக கூட்டணி |

மம்முட்டி நடிப்பில் மலையாளத்தில், வரும் டிசம்பர் 5ம் தேதி வெளியாக இருக்கும் படம் களம் காவல். ஜிதின் கே ஜோஸ் இயக்கி உள்ளார். நடிகர் விநாயகன் இன்னொரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஏற்கனவே மீடியாக்களில் அடிபட்டு வந்த செய்தியை உறுதிப்படுத்தும் விதமாக சமீபத்தில் நடைபெற்ற இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் மம்முட்டி பேசும்போது, “இந்த படத்தில் விநாயகன் தான் ஹீரோ. நானும் கூட ஹீரோ தான் இருந்தாலும் வில்லன்” என்று தங்களது கதாபாத்திரங்களை உறுதிப்படுத்தினார்.
“முதலில் என்னைத்தான் அந்த கதாபாத்திரத்தில் நடிக்க சொன்னார்கள். நான் தான் இதில் விநாயகன் பொருத்தமாக இருப்பார் என்று கூறினேன். அவரிடம் சொன்னபோது நிஜமாக அந்த கதாபாத்திரத்திற்காக தான் என்னை தேடி வந்திருக்கிறீர்களா என்று தயக்கம் காட்டி இருக்கிறார். இந்த படத்தில் என் கதாபாத்திரம் உடனே எல்லோருக்கும் பிடிக்குமா என்று சொல்ல முடியாது. என்னை பொறுத்தவரை இந்த படம் ஒரு பரிசோதனை முயற்சி அல்ல.. ஆனால் என்னுடைய கதாபாத்திரம் தான் மிகப்பெரிய பரிசோதனை முயற்சி” என்று கூறியவர் விநாயகனை மேடை ஏறி பேசும்படி அழைத்தார்.
மேடையேறிய நடிகர் விநாயகன், “எனக்கு எப்படி பேசுவது என்று தெரியாது. அது உங்களுக்கே தெரியும்” என்றார். சமீபத்தில் தான் அவர் தனக்கு பொதுமேடைகளில் பேசுவதில் உள்ள சிரமம் பற்றி வெளிப்படையாக கூறியிருந்தார். உடனே மம்முட்டி அவரிடம், “உங்களுக்கு எப்படி பேசுவது என்று தெரியாமல் இருக்கலாம். ஆனால் உண்மையிலேயே எப்படி நடிக்க வேண்டும் என்பது உங்களுக்கு நன்றாகவே தெரியும். ஒரு வகுப்பறையில் இருக்கும் குறும்புக்கார குழந்தையை எல்லோருமே ரசிப்போம் இல்லையா ? அப்படித்தான் விநாயகனும்” என்று கூறி அவரை நெகிழ வைத்தார் மம்முட்டி.




