ராகினி எம்எம்எஸ் 3 திரில்லர் படத்தில் இணைந்த தமன்னா | தமிழைப் போலவே தெலுங்கிலும் அதிக தியேட்டர்களில் வெளியாகிறது கருப்பு | பெத்தி பட விழாவில் ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி | கிரிக்கெட் வீரர் பயோபிக்கில் மீண்டும் இணையும் 'லகான்' கூட்டணி | அதிக பட்ஜெட், அதிக சம்பளம் : மாரி செல்வராஜ் படத்துக்கு சிக்கலா? | ரஜினிகாந்த், கமல்ஹாசன் இணையும் படம் இந்த சூழ்நிலையில் நடக்குமா? | திருப்பதி கோயிலில் சமுத்திரக்கனி வழிபாடு : விஜய்க்கு வாழ்த்து | திருமாவளவனை மறைமுகமாக விமர்சித்த நடிகை சனம் ஷெட்டி | பிரேமலு காமெடி நடிகருடன் மமிதா பைஜு ஜோடியாக நடிக்கும் புதிய படம் துவக்கம் | பெத்தி படப்பிடிப்பு தளத்திற்கு இயக்குனர் சுகுமாருடன் விசிட் அடித்த சிரஞ்சீவி |

தனுஷ் உடன் குபேரா படத்தில் நடித்த ராஷ்மிகா மந்தனா அடுத்தபடியாக மைசா என்ற படத்தில் கதையின் நாயகியாக நடிக்கப் போகிறார். இந்த படத்தின் போஸ்டர் கடந்த மாதம் வெளியாகி இருந்தது. அதில் ஒரு மிரட்டலான தோற்றத்தில் காணப்பட்டார் ராஷ்மிகா மந்தனா. இந்த நிலையில் மைசா படத்தின் பூஜை இன்று ஹைதராபாத்தில் நடைபெற்றுள்ளது. தயாரிப்பாளர் சுரேஷ்பாபு, ராஷ்மிகாவின் முதல் ஷாட்டுக்கு கிளாப் போடு அடித்து தொடங்கி வைத்திருக்கிறார். இதுவரை ராஷ்மிகா நடித்திராத ஒரு அதிரடியான வேடத்தில் இந்த படத்தில் கதையின் நாயகியாக நடிப்பதால் இந்த மைசா படத்திற்காக எதிர்பார்ப்பு இப்போதே அதிகரித்து இருக்கிறது. இப்படத்தில் ராஷ்மிகாவுடன் நடிக்கக்கூடிய மற்ற நடிகர் நடிகைகள் குறித்த தகவல் விரைவில் வெளியாக உள்ளது.