11 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழில் நஸ்ரியா | ஹவுஸ்புல் ஆகும் ஜப்பானியத் திரைப்படம் | கார்மேனி செல்வத்தின் கதை என்ன? | பிளாஷ்பேக்: விஜயகாந்தின் இரட்டை வேட கணக்கை துவக்கிய ராமன் ஸ்ரீ ராமன் | பிளாஷ்பேக் : தேவதாஸ் படத்திலிருந்து நீக்கப்பட்ட சவுகார் ஜானகி | நடிப்பும், எழுத்தும் எனது இரு கண்கள்: 'லோகா' எழுத்தாளர் சாந்தி பாலச்சந்திரன் | சரோஜாதேவி, விஷ்ணுவர்தனுக்கு கர்நாடக ரத்னா விருது | பிகினிக்கு வயது ஒரு தடையா ? நோ… | தீபாவளி போட்டியில் 'காந்தா' ? | 14 ஆண்டுகளுக்கு பிறகு தயாராகும் ‛உருமி' இரண்டாம் பாகம் |
ரஜினி நடிப்பில் தற்போது கூலி படத்தை இயக்கி இருக்கிறார் லோகேஷ் கனகராஜ். அடுத்த மாதம் 14ம் தேதி திரைக்கு வரும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். லோகேஷ் அளித்துள்ள பேட்டி ஒன்றில் அஜித்தை வைத்து எப்போது படம் இயக்குவீர்கள் என்று கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் அளித்துள்ள பதில் : அஜித்தை வைத்து படம் இயக்குவதில் ஆர்வமாக இருக்கிறேன். அதற்கான பேச்சுவார்த்தை ஏற்கனவே நடைபெற்றது. ஆனால் அவர் கார் பந்தயங்களில் பிஸியாக இருக்கிறார். அதனால்தான் நாங்கள் இணைவது தள்ளிப் போகிறது. அவரை வைத்து எனது பாணியில் ஒரு அதிரடியான ஆக்ஷன் படத்தை இயக்க வேண்டும். அவரது ஆக்ஷன் முகத்தை எனது படத்தில் காண்பிக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது. அதனால் தற்போது ஒப்பந்தமாகி இருக்கும் படங்களை இயக்கி முடித்ததும் மீண்டும் அஜித் குமாரை சந்தித்து கால்சீட் வாங்கி அவருக்காகவே உருவாக்கி வைத்துள்ள அந்த அதிரடியான ஆக்ஷன் கதையை இயக்குவேன் என்று தெரிவித்துள்ளார் லோகேஷ் கனகராஜ்.